தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னம், தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.

இந்த் படத்தில் நாயகன் படத்திற்கு பின்னர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

மேலும் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், சான்யா மல்ஹோத்ரா, வடிவுக்கரசி, வையாபுரி போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதையும் படிங்க: தக்லைஃப் பட ஹரோயின்கள் மேல் வருத்தப்பட்ட கமல்ஹாசன்..! மேடை பேச்சால் அதிர்ந்த மணிரத்தினம்..!
கேங் ஸ்டார் கதையம்சத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று 'தக் லைஃப் படத்தில்' இருந்து ஜிங்குசான் பாடல் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த பாடலை ரிலீஸ் செய்வதற்காகவே... மிகப்பெரிய விழா வைத்து படக்குழு ரிலீஸ் செய்தனர். இதில் படக்குழுவை சேர்ந்த இயக்குனர் மணிரத்னம், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, கமல்ஹாசன், அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜிங்குசான் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த விழாவில் சிம்பு மற்றும் த்ரிஷா எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இவர்களின் ஜோடியை பார்த்த நடிகர்கள் எப்போது விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் இணைந்து நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் இந்த விழாவில் சிம்பு லாங் வைத்து கொண்டு ஸ்டைலிஷாக வந்த நிலையில், திரிஷா மிகவும் சிம்பிளாக சிவப்பு நிற சேலையில் வந்திருந்தார். இவர்கள் இருவரின் தோற்றமும் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக இறங்கிய த்ரிஷா..! 2025ல் பல படங்கள் கைவசம்..!