வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனரும் விசிகவில் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த முதல் நாளே அவருக்கு ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பு இது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிதல், தவெகவுக்கு சாதகம், பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாற்று கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பு வாங்கிய கையோடு, தனது முன்னாள் கட்சித் தலைவரான திருமாவளவனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. தமிழக அரசியலிலேயே புதிய கட்சியில் இணைந்த பிறகு, பழைய கட்சித் தலைவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு தாவுகிறாரா..? கோவை சத்யன் என்ன சொல்கிறார் தெரியுமா.?
எங்கு கள அரசியலைக் கற்றுக் கொண்டேனோ அங்கு வந்து ஆசி பெற வந்தேன். ஒரு கருத்தியல் மற்றும் கொள்கை ரீதியிலான பயணத்தை நான் திருமா அண்ணனிடம் தான் கற்றுக்கொண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு எப்போதும் மக்களுக்கானதாக இருக்கும். அதற்காக திருமா அண்ணான் வாழ்த்து மற்றும் அறிவுரைகளை கூறினார்.

பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கையின் படி என் உயிர் மூச்சு இருக்கும் வரை எனது பயணம் தொடரும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிர் எதிர் துருவங்கள் கிடையாது.
சாதிய அடக்குமுறை மற்றும் மத வாதத்திற்கு எதிரான விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கொள்கைகள் ஒரே கருத்து மற்றும் கொள்கையைத் தான் கொண்டுள்ளனர். எனவே கொள்கை அடிப்படையில் இரண்டு கட்சிகளும் ஒரே பாதையில் தான் பயணிக்கிறோம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: விஜய் போட்ட கறார் கன்டிஷன்; புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்!