பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவைச் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. இதற்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வளத்தூர்,அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களாக போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'திமுக கூட்டணிக்குள் பூகம்பம்... ஸ்டாலின் ஆட்சி மீது கோபம்...' விஜயை கூட்டணிக்கு அழைக்கும் காங்கிரஸ்..!
இந்த போராட்டக்குழுவை சந்திப்பதற்காக ஜனவரி 19 அல்லது 20இல் பரந்தூர் செல்ல அனுமதி கேட்டு மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை மறுநாள் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டக் குழுவை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக விக்கிரவாண்டியில் நடந்த தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'விஜயால் அதிமுகவுக்கு பலம்..! சிவகாசியில் கூட்டணி வெடியை பற்ற வைத்த எடப்பாடியார்..?