மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் தான் பாவனி ரெட்டி. கடந்த 2012-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லாகின் என்கிற திரைப்படம் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கினார்.

பின்னர் தெலுங்கில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தெலுங்கில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கு, ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து தமிழில், 2015-ஆம் ஆண்டு வஜ்ரம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: அர்ஜுன் மகளுக்கு வெளிநாட்டு காதலர் கொடுத்த பரிசு! வைரலாகும் புதிய போட்டோஸ்!
மேலும் இனி அவனே, மொட்ட சிவா கெட்ட சிவா, போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியாத நிலையில்... அதிரடியாக சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

அந்த வகையில், தமிழில் இவர் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டை வால் குருவி' தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர், பாசமலர், EMI, போன்ற தொடர்களில் நடித்தார். பிசியாக சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே சீரியல் நடிகரும் - காதலருமான பிரதீப்பை காதலர் தினத்திலேயே கரம் பிடித்தார்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இவரது கணவர் திருமணம் ஆன 4 மாதத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தாக்கத்தில் இருந்து மீள மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த துவங்கிய போது தான்... விஜய் டிவி சின்னத்தம்பி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கணவர் இறந்த ஒரு சில வருடத்தில்... மற்றொருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்த போது தான்... விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு விளையாடியபோது... வைல்டு கார்டாக உள்ளே வந்த, அமீர், பாவனியை காதலிப்பதாக கூறினார்.

இதுவும் கன்டென்ட் காதலாகவே இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் இவரின் காதல் தொடர்ந்தது. ஒரு வழியாக பாவனியையும் காதலிக்க வைத்த அமீர்... 3 வருடமாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் இன்று திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: பட வாய்ப்புக்காக இப்படி? கவர்ச்சிக்கு தாவிய பிரியங்கா மோகன் போட்டோஸ்!