எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ் மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதையொட்டி அங்குள்ள பல்வேறு மீனவ சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் யாழ்ப்பாணம் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு ஒன்றுகூடி இந்திய தூதரகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

"தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற முழக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் பேரணி, ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!
இந்திய துணை தூதரகத்திற்குள் மீனவர்கள் நுழைய முடியாத வகையில் அந்த அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எஞ்சியவர்கள் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மீனவ பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தூதரக அதிகாரிகளிடம் வழங்கினர். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் "உங்களது கடற்படை நடவடிக்கை எடுத்தால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரமுடியாது. எனவே கடற்படையை சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு" கூறியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்திய துணைத் தூதரகத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி சென்று முடிந்தது..
இதையும் படிங்க: 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மறியல் வழக்கு.. விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி விடுதலை..!