இந்த சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் சண்முகம் ரத்னா வாழ்க்கை குறித்து பேசிய சௌந்தரபாண்டியை அடிக்க பரணி அதை பார்த்து கோபமான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பரணி நீ என் அப்பாவையே அடிப்பியா இனிமே நான் என்ன நடந்தாலும் உன் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கோபப்பட்டு விட்டு கிளம்பி செல்கிறாள். இதை பார்த்து சௌந்தரபாண்டி சந்தோஷப்படுகிறார்.
ஏன் இப்படி நடக்குது என விரக்தி அடையும் சண்முகம் நேராக கோவிலுக்கு வந்து முருகனிடம் பரணி வீட்டுக்கு வர வரைக்கும் நான் இங்கே இருந்து போக மாட்டேன் என குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து முருகனுக்கு நீர் அபிஷேகம் செய்தபடி இருக்கிறான்.
இதையும் படிங்க: சகுனி வேலை பார்த்த சௌந்தரபாண்டி.. பரணி, சண்முகம் இடையே உருவாகும் பிரிவு - அண்ணா சீரியல் அப்டேட்!
மறுபக்கம் பரணி கிளினிக்கில் சிவபாலனிடம் என்ன நடந்தாலும் அது எப்படி அப்பாவை கைநீட்டி அடிக்கலாம் என ஆவேசப்படுகிறாள். சிவபாலன் இதுல ஏதோ சந்தேகம் இருக்கு என்று சொன்னால் பரணி அதை ஏற்க மறுக்கிறாள்.
சண்முகம் முருகனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி ஊற்றி டயார்டாக இருக்க உடன்குடி உள்ளிடோர் போதும் என தடுத்து நிறுத்த முயற்சி செய்ய சண்முகம் கேட்க மறுக்கிறான்.
வீட்டில் இசக்கி வாந்தி எடுக்க முருகன் காலண்டர் ஆடுகிறது. ஒரு பக்கம் பரணியின் கோபம், இன்னொரு பக்கம் சண்முகத்தின் பிடிவாதம் என இருக்க இசக்கி வாந்தி எடுத்து மயங்கி விழுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: சரக்கால் சிக்கிய வெங்கடேஷ்... வேட்டையாட தயாரான சண்முகம்! அண்ணா சீரியலின் அப்டேட்!