இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ஷண்முகத்துடன் ஸ்கூலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வெங்கடேஷ் சீக்கிரமாக ஸ்கூலுக்கு வர வழியில் அவனை சந்திக்கும் அறிவழகன் நீங்க சின்ன பசங்களுக்கு தானே கிளாஸ் எடுக்கறீங்க.. அப்போ எதுக்கு இவ்வளவு சீக்கிரமா வரீங்க என்று கலாய்க்கிறான். இதனால் வெங்கடேஷ் கடுப்பாகிறான்.
அடுத்ததாக ஷண்முகத்துடன் வந்த ரத்னா வழியில் வண்டியை நிறுத்தி பரணியை ஏன் அமெரிக்கா அனுப்ப மாட்டுற? என்று பேச ஷண்முகம் எனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துடீங்களா? உங்களை படிக்க வச்ச எனக்கு அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? என்று கோபப்படுகிறான். இதனால் ரத்னா அதிர்ச்சி அடைகிறாள்.
இதையும் படிங்க: சௌந்தர பாண்டியன் சதியை உடைத்த சண்முகம்! பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் எபிசோட்!
மேலும் இந்த சமயத்தில் உடன்குடியிடம் இருந்து போன் கால் வர ஷண்முகம் நீ ஆட்டோல போய்ட்டு, நான் ஆட்டோ ஸ்டாண்டில் விட்டு விடுறேன் என்று சொல்ல ரத்னா ஒன்னும் வேண்டாம், எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு நடந்து போக தெரியும் என சொல்கிறாள்.
இந்த நேரம் பார்த்து அறிவழகன் இந்த வழியாக வர ஷண்முகம் டேய் வெள்ளக்கோட்டான் ரத்னாவை ஸ்கூலில் டிராப் பண்ணிடு என்று சொல்ல ரத்னா அவன் கூட போக மாட்டேன் என்று சொல்ல அறிவழகன் ஏங்க நான் என்ன பண்ணேன் என்று சொல்லி அவளை அழைத்து செல்கிறான்.

இதை பார்த்த வெங்கடேஷ் மீண்டும் கோபமாகிறான், உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று அரிவாள் சாணம் பிடிக்கும் இடத்தில போய் நிற்க சௌந்தரபாண்டி இதை பார்த்து அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி ஊர் தப்பா பேசணும்.. அப்போ நீ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறதா சொன்னா காலம் முழுக்க அவ உன் காலடியில் கிடப்பா. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று ஐடியா கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதையும் படிங்க: சௌந்தரபாண்டியின் திட்டம் அறிந்த சண்முகம்.. முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை, நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!