×
 

இப்படியே போனா எப்படி?... தலையில் இடியாய் இறங்கிய தங்கம் விலை...! 

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,290 ரூபாய்க்கும், சவரன் 66,320 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (20/03/2024): 

இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 310 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம்; 66 அயிரத்தைக் கடந்தது தங்கம் விலை - காரணம் என்ன? 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 22 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 065 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 104 ரூபாயாகவும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. 

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும், போர் பற்றிய கவலைகளும் முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் மீதான விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. 

இதையும் படிங்க: நேத்தே நகை வாங்கியிருக்கலாம்... இன்னைக்கு தங்கம் விலை ஜெட் வேகத்துல ஏறிடுச்சே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share