பொங்கல் பண்டிகையில் தங்கம் கொடுத்த சர்ப்ரைஸ்; இல்லத்தரசிகளே நகை வாங்க தயாரா?
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலையைப் பார்த்து இனி நகை வாங்க முடியுமா? என இல்லத்தரசிகள் வேதனைப்பட்ட நிலையில், பொங்கல் நன்நாளில் தங்கம் விலை சரசரவென குறைந்துள்ளது.
புத்தாண்டு பிறந்ததில் இருந்தே தங்கம் விலை கிடுகிடுவென உயர்வதும், சற்றே சரிவதும் என ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலையைப் பார்த்து இனி நகை வாங்க முடியுமா? என இல்லத்தரசிகள் வேதனைப்பட்ட நிலையில், பொங்கல் நன்நாளில் தங்கம் விலை சரசரவென குறைந்துள்ளது.
தங்கம் விலையில் தடாலடி மாற்றம்:
சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 330 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 996 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 63 ஆயிரம் 968 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் தங்கம்; விட்டுக்கொடுக்காத வெள்ளி; பொங்கல் பண்டிகையிலும் ‘கிடுகிடு’ உயர்வு!
இறங்கி வந்த வெள்ளி:
சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) ஒரு கிராம் வெள்ளி விலை இரண்டு ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி இரண்டாயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துடன், உள்ளூர் நாணயமான ரூபாயின் மதிப்பு, புதிய வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் விற்பனை சரிந்ததையடுத்து, இன்று சென்னையில் தங்கம் விலை சற்றே குறைக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மக்களே தங்கம் வாங்க தயாரா? - நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இன்றைய விலை நிலவரம் இதோ!