×
 

4வது நாளாக வந்த குட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரன் ரேட் எவ்வளவு? 

தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. 

தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. 

நேற்றைய  வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,215 ரூபாய்க்கும், சவரன் 65,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (25/03/2024): 

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 185 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: Gold Rate Today: போட்டுத் தாக்கு... இன்று தடாலடியாக குறைந்த தங்கம் விலை..! 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 32 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 929 ரூபாய்க்கும், சவரனுக்கு 286 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 432 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தை போலவே வெள்ளியும் தொடர்ந்து 4வது நாளாக ஒரே விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, ஸ்பாட் சந்தையில் தேவை குறைவு ஆகிய காரணிகள் மூலம் இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது. டிரம்ப் அரசு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தனது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பதில் இருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை, எனவே டாலர் மதிப்பு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பெரிய அளவிலான ஏற்ற இறக்கம் இருக்கும்.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்... ஒரே நாளில் தடாலடியாக மாறிய தங்கம் விலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share