×
 

வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம்... சவரன் விலை சரசரவென குறைவு...! 

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் விற்பனையைத் தொடங்கியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. 

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் விற்பனையைத் தொடங்கியுள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. 

கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,220 ரூபாய்க்கும், சவரன் 65,760 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (17/03/2024): 

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 210 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: அய்யய்யோ...! அலற வைக்கும் தங்கம் விலை... இனியும் கனவிலும் நகை வாங்க முடியாது போலயே...! 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 11 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 956 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து  ரூபாய்க்கும் 648 விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததையடுத்து தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: இப்பவே கண்ண கட்டுதே... தலை சுற்ற வைத்த தங்கம் விலை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share