×
 

விலையைக் கேட்டாலே தலை சுத்துதே... இன்று வரலாற்று உச்சம் தொட்ட தங்கம்..!

தங்கம்  விலை முதல் முறையாக சவரனுக்கு 64 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை பிரியர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தங்கம்  விலை முதல் முறையாக சவரனுக்கு 64 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை பிரியர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

புத்தாண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. என்றாவது ஒருநாள் சற்றே குறைந்தாலும் மறுநாளே இருமடங்காக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் முறையாக தங்கம் விலை சவரனுக்கு 64 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தங்கம் விலை: 

சென்னையில் இன்று (புதன் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 80  ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 060 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... எகிறி அடிக்கும் தங்கம்... இன்றும் கிடுகிடு உயர்வு! 

அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 87 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 792 ரூபாய்க்கும், சவரனுக்கு 696  ரூபாய் அதிகரித்து 70 ஆயிரம் 336  ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை: 

 வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை உயரக் காரணம் என்ன? 

சர்வதேச அரசியல் சூழல் மற்றும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பாக மாற்றுகிறார்கள். இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் தங்கத்தின் விலை உயர மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆத்தாடி...! இனி தங்கத்தை கையால் கூட தொடமுடியாது போலயே... விண்ணை முட்டும் விலை உயர்வு! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share