Gold Rate In Chennai: ஒரே நாளில் இவ்வளவு சரிவா? - சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை!
கடந்த வாரம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல, பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் விஷயமாகும். எனவே, தங்க விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தங்கம் விலை நான்ஸ்டாப்பாக ஏறிக்கொண்டே இருந்தது. கடந்த வாரம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை:
சென்னையில் இன்று (திங்கள் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 85 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 705 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: வாரத்தின் கடைசி நாளில் இப்படியா?... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை!
அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 93 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 405 ரூபாய்க்கும், சவரனுக்கு 744 ரூபாய் குறைந்து 67 ஆயிரம் 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (திங்கள் கிழமை) எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
சர்வதேச சந்தையில் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை விட்டு விலகியுள்ளதால் விலை சற்றே குறைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா?