×
 

அடேங்கப்பா! இதுக்கு ஒரு என்டே இல்லையா? -தங்கம் விலை புதிய உச்சம்

இன்று தங்கம் விலை ஒரே அடியாக சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை இன்று 68 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

நேற்றைய  வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,510 ரூபாய்க்கும், சவரன் 68,080 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: ரம்ஜானில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... ஒரே நாளில் கிடுகிடு உயர்வு...!

 

தங்கம் விலை நிலவரம் (03/04/2024): 

இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 50 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 68 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 55 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 338 ரூபாய்க்கும், சவரனுக்கு 440  ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு இரண்டு ரூபாய் குறைந்து 112 ரூபாய்க்கும், கிலோவிற்கு இரண்டாயிரம் ரூபாய் குறைத்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

 

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு நடைமுறைகளால் மந்தநிலை உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் முதலீட்டாளர்களின் கவனத்தை பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் மீது திருப்பி உள்ளது.

இதையும் படிங்க: இனி தங்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது போலயே... தங்கம் விலை புதிய உச்சம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share