×
 

இப்படியே போனா எப்படி?... ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் தங்கம்... இன்றும் விலை கிடுகிடு உயர்வு...! 

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

கடந்த வார இறுதி வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,040 ரூபாய்க்கும், சவரன் 64,320 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (10/03/2024): 

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 050 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: விண்ணத்தைத் தாண்டி தொடுவாயா?... மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை...! 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து  8 ஆயிரத்து 781 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 248 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும்  இன்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

உயர்வுக்கான காரணம் என்ன?

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்பட்ட தொடர் சரிவு காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக நம்ப வைத்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவது, உள்நாட்டு சந்தையில் விலை உயர காரணமாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: அடிச்சது ஜாக்பாட்... இன்னைக்கு தங்கம் வாங்கினால் இவ்வளவு லாபமா?... உடனே முந்துங்க...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share