முகேஷ் அம்பானி விரைவில் ஜியோகாயினுடன் கிரிப்டோகரன்சி சந்தையில் இறங்கக்கூடும் என்ற ஊகம் பரவலாக உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஜியோகாயின் பற்றிய செய்திகள் ஜியோ தளங்களில் தோன்றத் தொடங்கியுள்ளன. ஜியோகாயின் பற்றிய வதந்திகள் வெளிவந்ததிலிருந்து, அது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
சில அறிக்கைகள் ஜியோகாயின் அடுத்த பிட்காயினாக மாறக்கூடும் என்று கூறுகின்றன. இருப்பினும் காலம் மட்டுமே அதனை முடிவு செய்யும். இதற்கிடையில், ஜியோகாயின்களை இலவசமாக சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை காண்போம். நிறுவனம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. JioSphere செயலியில் JioCoins சம்பாதிக்கலாம்.

அந்த செயலியில் "Jio Coin சம்பாதிக்க உள்நுழையவும்" என்று ஒரு செய்தி தோன்றும். இதனை தொடங்குவதற்கு முன்பு Android க்கான Google Play Store அல்லது iOS க்கான Apple App Store இலிருந்து JioSphere செயலியைப் பதிவிறக்கவும். நிறுவப்பட்டதும், உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து ஒரு கணக்கை உருவாக்கவும். உங்கள் கணக்கை உருவாக்கிய பிறகு, JioSphere-யை பயன்படுத்தத் தொடங்குங்கள்.
இதையும் படிங்க: பட்ஜெட்டுக்குப் பிறகு தங்கத்தின் விலை அதிகரிக்குமா.? தங்கம் வாங்க இது சரியான நேரமா? இல்லையா?
நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது, காலப்போக்கில் ரிவார்ட்ஸ்களாக JioCoins ஐப் பெறுவீர்கள். இந்த JioCoins செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட Polygon வாலட்டில் வரவு வைக்கப்படும். உங்கள் கணக்கு அமைக்கப்பட்டதும், JioCoin-ஐத் தேர்வுசெய்ய ஆப்ஸ் அமைப்புகளில் ஒரு விருப்பத்தைக் காண்பீர்கள். இது கிரிப்டோ சந்தையில் JioCoin-ன் சாத்தியமான நுழைவை மேலும் குறிக்கிறது.
இந்த ஆப் பயனர்கள் உள்நுழைந்து இலவச JioCoins-ஐப் பெற ஊக்குவிக்கிறது. JioCoin பற்றிய விவரங்கள் ஊகமாகவே இருந்தாலும், இந்த ஆரம்பகால அம்சங்களும் குறிப்புகளும் கிரிப்டோ துறையில் ஒரு புரட்சிகரமான நடவடிக்கைக்கு ஜியோ தயாராகி வருவதைக் குறிக்கின்றன என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: வரி செலுத்துவோருக்கு மகிழ்ச்சி செய்தி.. பட்ஜெட் 2025ல் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்பு வரப்போகுது!!