×
 

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ..ரயில் தள்ளிக்கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த குற்றவாளி சதீஷ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

சென்னையில் காதலிக்க மறுத்த  கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த குற்றவாளி சதீஷ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

 சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்ய பிரியா. அதே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சதீஷின் நடவடிக்கையால் சத்யா பிரிவை அவரிடம் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் சத்யாபிரியாவிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் சதீஷ்.இருப்பினும், சத்யபிரியாவை அவரது காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சதீஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.  

இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி செல்வதற்காக நின்றிருந்த சத்யா பிரிவை ரயில்வரும் சமயம்பார்த்து தள்ளிவிட்டு தப்பியோடினார் .பின்னர் போலீஸ் வலையில் சிக்கிய சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது .

இதையும் படிங்க: அரசுக்கு எதிராக கண்டிக்கவும் தெரியும் ..போராடவும் தெரியும்.. கர்ஜிக்கும் திருமா

சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்து வந்தார். சதீஷ் குற்றவாளி என்று கடந்த 27ஆம் தேதி நீதிபதி ஸ்ரீதேவி அறிவித்தார். இந்த நிலையில்,பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த பின்பு, கொலை வழக்கின் கீழ் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை மக்கள் வரவேற்றுள்ளனர் .

இதையும் படிங்க: காலையிலேயே ரசிகர்களுக்கு வந்த இன்ப செய்தி ...ரஜினி சொன்ன சூப்பர் அப்டேட்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share