அடிச்சது ஜாக்பாட்...! தங்கம் விலை எதிர்பாராத அளவு குறைவு... நகைக்கடைக்கு உடனே ஓடுங்க...!
தங்கம் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
புத்தாண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. என்றாவது ஒருநாள் சற்றே குறைந்தாலும் மறுநாளே இருமடங்காக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று 64 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்துள்ளது.
தங்கம் விலை:
சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 120 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி.. தங்கம் மீது முதலீடு செய்யலாமா? வேண்டாமா?
அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 131 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 661 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 48 ரூபாய் குறைந்து 70 ஆயிரம் 336 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை உயரக் காரணம் என்ன?
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான ஜெரோம் பவலின் கருத்துக்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்துள்ளன. இதனால் உள்நாடு வர்த்தக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: விலையைக் கேட்டாலே தலை சுத்துதே... இன்று வரலாற்று உச்சம் தொட்ட தங்கம்..!