×
 

வேகமெடுக்கும் தங்கம்; விட்டுக்கொடுக்காத வெள்ளி; பொங்கல் பண்டிகையிலும் ‘கிடுகிடு’ உயர்வு! 

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. 

புத்தாண்டு பிறந்ததில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அவ்வப்போது சற்றே சரிந்தாலும், திடீரென தடாலடியாக உயர்ந்து இல்லத்தரசிகளையும், நடுத்தர மக்களையும் தங்கம் விலை நிலைகுலைய வைக்கிறது. அந்தவகையிலும், பொங்கல் பண்டிக்கைக்கு தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 

ஷாக் கொடுத்த தங்கம் விலை: 

சென்னையில் இன்று (திங்கள் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 5 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 875 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரம் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதையும் படிங்க: மக்களே தங்கம் வாங்க தயாரா? - நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இன்றைய விலை நிலவரம் இதோ! 

ஒரு லட்சத்தை தொட்ட வெள்ளி: 

சென்னையில் இன்று (திங்கள் கிழமை) ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் அதிகரித்து 102 ரூபாய்க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

காரணம் என்ன? 

அமெரிக்க டாலர் விலை உயர்வு மற்றும் மெதுவான அமெரிக்க ஃபெட் வட்டி குறைப்பு சலசலப்பு காரணமாக சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மீது திரும்பியுள்ளது. மற்றொருபுறம் காசா-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: 2025ல் ரூ.90 ஆயிரத்தை தாண்டும் தங்கத்தின் விலை; அடித்துக் கூறும் நிபுணர்கள் - எப்போ வாங்கலாம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share