தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் இவ்வளவு தங்கமா ..? பிபியை எகிறவைக்கும் சர்வதேச ரிப்போர்ட்..!
தமிழ்நாட்டு பெண்களிடம் இவ்வளோ தங்கம் உள்ளதா என அதிர வைக்கும் சர்வதேச அறிக்கை வெளியாகியுள்ளது
2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக சர்வதேச கோல்ட் கவுன்சிலிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், அமெரிக்கா 8,300 டன் தங்கத்துடன் முதலிடத்திலும், 4,500 டன்னுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், இத்தாலி மற்றும் பிரான்ஸ் தலா 3,000 டன்னுடன் 3 மற்றும் 4ஆம் இடத்திலும் உள்ளன.இந்தியா 830 டன்னுடன் 9வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக 700 டன்னுடன் 10வது இடத்தில் இருந்தது. தற்போது அதிக அளவு தங்கம் வாங்கியதால் ஒரு இடம் முன்னேறி தற்போது 9வது இடத்தில் உள்ளது. இவை அனைத்தும் இந்திய அரசிடம் உள்ள அதிகாரப்பூர்வமாக உள்ள தங்க கையிருப்பு ஆகும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் ஒட்டுமொத்த தங்கத்தை சேர்த்தால் 2 லட்சம் டன் வரை இருக்கும். அதில் 11% இந்திய மக்களிடம் ஆபரண தங்கமாக இருக்கிறது.குறிப்பாக. இந்தியாவில் ஆபரண தங்கமாக 24 ஆயிரம் டன்னிற்கு மேல் தங்கம் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 40 சதவீத தங்கம் தென்னிந்தியாவில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாகவும் அந்த கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வதால் பாதுகாப்பாக உள்ளது என கருதி மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான முதலிடம் அதிகரித்து வருகிறது என்றும் தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .
இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!