×
 

ஈஸியா கடன் கிடைக்கும்..! டெபாசிட், கடனுக்கான வட்டியைக் குறைத்த வங்கிகள்..!

டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைந்துள்ளன.

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து 2வது முறையாக 50 புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து வங்கிகள் கடனுக்கான வட்டியையும், டெபாசிட்கள் மீதான வட்டியையும் குறைத்துள்ளன. இதனால் புதிதாகக் கடன் வாங்குபவர்களும் எளிதாக வாங்கலாம், வீட்டுக்கடன், வாகனக் கடன் கட்டி வரும் மக்களுக்கான வட்டி, மாதத்தவணையும் குறையும். 

ஹெச்டிஎப்சி வங்கி!

இதன்படி தனியார் துறையில் பெரிய வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி டெபாசிட்களுக்கான வட்டியை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் 2.75% வட்டியும், அதிகமாக இருந்தால் 3.25% வட்டியும் வழங்கப்படும்.கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக வங்கிகளில் வட்டியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாளை பேங்க் லீவு.. ரிசர்வ் வங்கி விடுமுறை லிஸ்ட்.. முழு விபரம் இதோ!

எஸ்பிஐ வங்கி!

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் வங்கியில் மூத்த குடிமக்கள், நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரையில் 20 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண் முதல் 2 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி 7.3%லிருந்து 7.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிக்கான வட்டி 7.5 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா!

பேங்க் ஆஃப் இந்தியாவில் வைப்பு நிதிக்கான வட்டி ரூ.3 கோடிக்கு குறைவாக இருந்தால், 4.25 %வட்டியும், 91 முதல் 179 நாட்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி 4.25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 180 நாட்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி 5.75%, ஓர் ஆண்டுக்கான டெபாசிட்களுக்கு 7.05% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.3 கோடிக்கும் குறைவாக,10 கோடிக்கும் குறைவாகஇருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி 5.75% மாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல வங்கிகள் வட்டி வீதத்தைக் குறைத்துள்ளன. எஸ்பிஐ வங்கி கடனுக்கான வட்டியை 25 புள்ளிகள் குறைத்து 8.25 ஆக வைத்துள்ளது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வட்டி வீதத்தை 8.65ஆகக் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டிக்குறைப்பை நிதிக்கொள்கைக் கூட்டத்தில் அறிவித்த பின்புதான் வங்கிகள் டெபாசிட், கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கி தொடர்ந்து இரு நிதிக்கொள்கைக் கூட்டத்தில் 50 புள்ளிகள் வட்டியைக் குறைத்து 6.50 சதவீதத்திலிருந்து வட்டி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நகை மறு அடமானம் வைப்பதில் கட்டுப்பாடு.. ஏழை, எளியோரை கந்து வட்டிக்கு தள்ளிய ரிசர்வ் வங்கிக்கு எதிர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share