ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! என்னென்ன.?
ஒவ்வொரு மாதமும் பல மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் ஏற்படப்போகும் மாற்றங்களை காணலாம்.
ஏப்ரல் மாதம் புதிய நிதியாண்டை கொண்டு வருகிறது, அதேசமயம் உங்கள் பணம் தொடர்பான சில முக்கிய விதிகளும் மாற்றம் அடைகின்றன. இந்த மாற்றங்கள் நேரடியாக உங்கள் பொருளாதாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சிலரின் UPI பரிவர்த்தனைகள் நிறுத்தப்படலாம்.
ஏப்ரல் 1 முதல், நீண்ட நாட்களாக செயலற்ற நிலையில் உள்ள மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் UPI பரிவர்த்தனைகளை NPCI நிறுத்தவுள்ளது. எனவே, உங்கள் UPI செயல்பட தொடர்ந்து பயன்படுத்தி வருவதை உறுதி செய்யவும்.
இனிமேல், FD, RD போன்ற சேமிப்பு திட்டங்களில் ரூ.1 லட்சம் வரை கிடைக்கும் வட்டி வருவாயில் TDS பிடித்தம் செய்யப்படாது. இதற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரையிலான வருமானம் மட்டும் TDS இன்றி கிடைத்த நிலையில், இது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற முதலீட்டாளர்களுக்கு இந்த வரம்பு ரூ.40,000ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் இந்த விதிகள் எல்லாம் மாறப்போகிறது.. மக்களே உஷார்.!
ஏப்ரல் 1 முதல், பல்வேறு வங்கிகளின் சேமிப்பு கணக்கு மற்றும் FD வட்டி வீதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ, எச்டிஎப்சி, இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் புதிய வட்டி வீதங்களை அறிவித்துள்ளன.
உங்கள் PAN-Aadhaar இணைக்கப்படவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் பங்குகளுக்கான மாலிவளி (டிவிடெண்ட்) கிடைக்காது. மேலும், மூலதன ஆதாய வரியில் (Capital Gains Tax) அதிகமான TDS பிடித்தம் செய்யப்படும். Form 26AS-ல் உங்கள் வரவு சேர்க்கப்படாததால் வரி திருப்பி (refund) பெறவும் தாமதமாகலாம்.
SEBI, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டீமாட் கணக்கு தொடங்குவதற்கான விதிகளை மேலும் கடுமையாக மாற்றியுள்ளது. இனிமேல், அனைத்து பயனர்களும் KYC மற்றும் பரிந்துரை (nominee) விவரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும். இதை செய்யத் தவறினால் உங்கள் கணக்கு முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் விதிகள் எல்லாம் மாறப்போகுது.. யுபிஐ முதல் பேங்க் மாற்றங்கள் வரை