‘திருமா ஏன் இப்படி திமுகவின் கொத்தடிமை ஆனார்..?’- சிறுத்தையை கதறவிடும் அண்ணாமலை குரூப்..!
திராவிட கட்சிகளுக்கு கொத்தடிமையாக இருக்க பாஜக ஒன்றும் விசிக இல்லை... அண்ணாமலை ஒன்றும் திருமாவும் இல்லை
‘‘கடைசி வரைக்கும் திராவிட கட்சிகளுக்கு கொத்தடிமையாக இருக்க பாஜக ஒன்றும் விசிக இல்லை... அண்ணாமலை ஒன்றும் திருமாவும் இல்லை’’ என அண்ணாமலையை கிண்டலடித்த விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக எகிறியடித்து வருகின்றனர்.
‘‘பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து நாளை முதல் பா.ஜ.க-வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள். அண்ணா பல்கலை. வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு. இதற்காக நாளை காலை கோவையில் உள்ள தனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளேன்.
தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதில் இருந்து செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து தி.மு.க விற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம்’’ எனத் தெரிவித்தது விவாதத்தை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: ஏதே... சில்லித்தனமான வேலையா..? திமுக மறுப்பை சல்லி சல்லியாய் உடைத்த அண்ணாமலை..!
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘‘அண்ணாமலை ஏன் இப்படி ஆனார்?" அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார்; அதிமுக எதிர்க்கட்சி இல்லை, பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார். லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.காந்தியடிகள் போல அகிம்சை வழியை கையில் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை; காந்தியடிகளே இவ்வாறு செய்ய மாட்டார். அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நகைப்புக்குரியதாக மாறிவிடக் கூடாது." எனக் கிண்டலடித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘‘அண்ணாமலைஜி தெய்வீகம், தேசப்பற்று உடையவர். உங்களைப்போல் தீயசக்தி திமுகவின் அடிமையல்ல. சிங்கம்போல், சிலிர்த்து, தனது கருத்துக்களை ஆணித்தரமாக, ஆதாரங்களுடன் பேசுபவர்...
முதலில் நீங்கள் ஏன் இப்படி ஆனீர்கள்? குறைந்தபட்சம் கண்டன அறிக்கை கூட விட தைரியம் இல்லாத நீங்கள் எல்லாம் பெரிய தலைவரா? ஏன் திமுகவின் ஊது குழல் ஆகிவிட்டீர்கள்? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? நீங்கள் ஓரளவு ஆவது கொள்கை பிடிப்பு உள்ளவர் என நினைத்து இருந்தோம். இப்படி ஆகிவிட்டீர்களே?
ஒரு தவறு நடந்து இருக்கிறது. அதைச் சுட்டி காட்ட லண்டன் போக தேவையில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளும் கட்சி கூட வருத்தத்தில் உள்ளது. நீங்கள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கிறீர்கள். கனிமொழி வருத்தம் தெரிவித்து உள்ளார்.
அதிமுக போல திமுக-விற்கு பயந்து பயந்து அரசியல் பண்ண சொல்கிறீர்களா திருமா? ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவன் கொஞ்சம் கடுமையான பயிற்சிகளை செய்து தான் ஆக வேண்டும்.
கடைசி வரைக்கும் திராவிட கட்சிகளுக்கு கொத்தடிமையாக இருக்க பாஜக ஒன்றும் விசிக இல்லை... அண்ணாமலை ஒன்றும் திருமாவும் இல்லை’’ என சாடையடியாக பதிலடி கொடுத்ஹு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம்