Gold Rate Today: தங்கத்தை விடுங்க இனி வெள்ளியைக் கூட வாங்க முடியாது போலயே... ஷாக்கடிக்கும் இன்றைய விலை நிலவரம்!
கடந்த 10 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது சவரன் 61 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் இன்று (வியாழன் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 610 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: தங்கம் கொடுத்த டபுள் ட்ரீட்... 2வது நாளாக இவ்வளவு குறைவா? - உடனே நகை வாங்க கிளம்புங்க!
அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 301 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 66 ஆயிரம் 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) வெள்ளி விலை கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 106 ரூபாய்க்கும், கிலோவிற்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாத நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: Gold Rate Chennai: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?