×
 

அடிச்சது ஜாக்பாட்... ஏறிய வேகத்தில் சரசரவென சரிந்த தங்கம் விலை... ஒரே நாளில் இவ்வளவு குறைவா? 

நேற்று காலை மாலை என இரண்டு வேலையிலும் கிடுகிடுவென உயர்ந்து தங்கம் விலை இன்று கணிசமான அளவு சரிந்துள்ளது.  

நேற்று காலை மாலை என இரண்டு வேலையிலும் கிடுகிடுவென உயர்ந்து தங்கம் விலை இன்று கணிசமான அளவு சரிந்துள்ளது.  

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,300 ரூபாய்க்கும், சவரன் 66,400 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம் (15/03/2024): 

இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 80 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 220 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 2 முறை இடியாய் இறங்கிய தங்கம் விலை... மாலையிலும் மளமளவென உயர்வு...! 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 87 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 967 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து  ரூபாய்க்கும் 736 விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததையடுத்து தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: அய்யய்யோ...! அலற வைக்கும் தங்கம் விலை... இனியும் கனவிலும் நகை வாங்க முடியாது போலயே...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share