ரூபாய் மதிப்பு 89 வரை சரியலாம்! டாலருக்கு எதிராக வரலாற்று வீழ்ச்சி ஏன்?
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு இந்த அளவு வீழ்ச்சி அடைந்தது இதுதான் வரலாற்றில முதல்முறையாகும்.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவாக கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் ரூ.86.04 ஆக வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு இந்த அளவு வீழ்ச்சி அடைந்தது இதுதான் வரலாற்றில முதல்முறையாகும். வர்த்தக்தின் இடையே 85 டாலருக்கும் கீழ் சரிந்தநிலையில், வர்த்தகம் முடிவில் 86மதிப்பைக் கடந்து மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி அடைந்தது என் என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு முதல்முறையாக 86 ரூபாயைக் கடந்து 86.04 என வீழ்ச்சி அடைந்தது. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு ரூ.58 முதல் ரூ.59 ஆகத்தான் இருந்தது. ஆனால், நரேந்திர மோடி பணத்தின் மதிப்பை தனது அரசாங்கத்தின் கவுரமாகக் கருதுகிறார்.
அவர் எப்போது பேசினாலும், எனக்கு அனைத்தும் தெரியும். ஒரு தேசத்தின் கரன்சி இதுபோன்று எப்போதும் சரிய முடியாது. இன்று பிரதமராக மோடி இருந்தும், அனைத்து சாதனைகளையும் கடந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வரலாறு படைத்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவுக்கு தேசத்தின் மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அதிக வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.!!
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரும் காலத்தில் இன்னும் மோசமாகச் சரியும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இதற்காக கச்சா எண்ணெய் வாங்க மத்திய அரசு டாலரில் பணம் செலுத்தும்போது டாலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு டாலர் மதிப்பு உயர்கிறது மேலும், உள்நாட்டு சந்தையில் உள்ள பங்குகள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுவது ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாகும்.
வரும் 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதால் அதனால் முதலீட்டாளர்கள் அச்சப்பட்டு முதலீட்டைத் திரும்பப்பெறுவதால் ரூபாய் மதிப்பு சரிகிறது.
வெள்ளிக்கிழமை அந்நியச் செலாவணி சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியதும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.85.88 ஆக இருந்தநிலையில், வர்த்தகத்தின் இடையே ரூ.85.85 ஆகவும், வர்த்தகம் முடிவில் ரூ.86.04 ஆக வீழ்ச்சி அடைந்தது.
மார்ச் மாதம் இறுதிக்குள் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 60 % வரை சரிந்து 87ஆக வீழ்ச்சி அடையும், கடந்த 3 மாதங்களுக்கு முன் 84 ஆக இருந்தநிலையில் மேலும் 3 ரூபாய் சரிவும். அடுத்த 6 மாதங்களுக்குள் வர்த்தகப் போட்டியை சமாளிக்க முடியாமல் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக ரூ.89 ஆக வீழ்ச்சி அடையும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்கள் மனைவிக்கு பணம் கொடுத்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் தெரியுமா? முழு விபரம் உள்ளே!