உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் தீவிர உணவு கட்டுப்பாடுகளுடன் வெவ்வேறு உணவு முறைகளை கையாண்டு வருகின்றனர். சிறுதானிய உணவுகள், காய்கறிகள் நிறைந்த உணவுகள், புரத உணவுகள் என பல்வேறு உணவுகளை எடுத்து வந்தாலும் உடல் எடையில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கிறது என்றாலே அது குடலில் எதோ பிரச்சினை உள்ளது என்பதை உணர்த்துகிறது. நம் சிறுகுடலில் 100 டிரில்லியன் அளவுக்கு நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன குறிப்பாக பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், வைரஸ்கள் கூட அதில் கூட்டாக வளர்ந்து கொண்டே இருக்கும். இதனை கட் பாக்டீரியா என்ற பெயர் கொண்டு அழைப்பர். இதில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் சேர்ந்தே இருக்கும். நல்ல பாக்டீரியாக்கள் குடலில் நன்மை பயக்கும் செயலில் இறங்கி உடலின் ஆரோக்கியத்திற்கு துணையாக அமையும் வகையில் செயல்படும். அதுவே தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குடலில் கேடுகள் விளைவித்து இரத்தத்தில் அசுத்தத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.

எனவே நாம் நல்ல பாக்டீரியாக்களை உடலில் இருந்து தினந்தோறும் வெளியேற்றினாலும் கூட அதை மீண்டும் நம் குடலில் தக்கவைத்துக் கொள்ளவும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அவ்வப்போது முற்றிலும் வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்குவதும் மிகவும் அவசியமாகிறது. இதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயன்படுகிறது. சரியான பசி உணர்வு, நல்ல உறக்கம், உடல் சுறுசுறுப்பு இதன் அளவை வைத்து நல்ல பாக்டீரியாக்கள் நம் உடலில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். இது உடலி்ன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டவும், தேவையான ஹோர்மோன் சுரக்கவும், கடினமான உணவுகளை செரிமானப்படுத்தவும் மிகவும் பயன்படுகிறது.
இதையும் படிங்க: சாதாரண சளியா? அல்லது நிமோனியா வா? எப்படி அறிந்து கொள்வது...

எனவே உணவு செரிமான மண்டலத்தை சீர்படுத்தும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருப்பின், அது உடல் எடையை பெருக்கி உடல் உபாதைகளை உருவாக்குகிறது. இது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது. எனவே இது உடலின் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் அதனை உடல் தக்கவைத்துக் கொள்ளும் வழிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை தவிர்த்து, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களை சமைத்து வேகவைத்து சாப்பிடுவது, வீட்டில் செய்யக்கூடிய தயிர், மோர் தினமும் சாப்பிட்டு வருவது, காய்கறிகள், பழங்கள் சேர்த்து சாப்பிட்டுவது, நல்ல பாக்டீரியாக்கள் பெருக சிறந்த வழிமுறைகள். இறைச்சி உணவுகள், மீன் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் முடிந்தளவுக்கு தவிர்த்து வருவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் உடல் சூடு அதிகரித்து நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சியை பாதிக்கும், எனவே குறைந்தது 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். எனவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர், முதலில் நல்ல பாக்டீரியாக்களை குடலில் தக்கவைக்கும் வாழ்க்கை முறைகளை பின்பற்றி வந்தாலே நல்ல பலனை கண்கூடாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஸ்கூல் பசங்க கண்ணாடி அணிவது அதிகரிப்பு.. என்னத்தான் பிரச்சினை.? என்னத்தான் தீர்வு..?