×
 

உடல் எடை குறைக்க போறிங்களா ? ஆளிவிதை அதுக்கு பயன் தரும்

கட்டுகோப்பான உடல் அழகும் வேண்டும் நல்ல ஆரோக்கியமும் வேண்டும் என்றால் அதற்கு ஆளிவிதை மிகவும் உறுதுணையாக அமையும். ஆளிவிதை பயன்பாடு என்ன என்று சற்று பார்ப்போமா?

உடல் எடை குறைய நாம் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கவனம் செலுத்தி வரும் அதே வேளையில் ஃபாளக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் குறித்தும் அறியவேண்டியுள்ளது. உடல் எடை குறையும் பொது ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து காப்பாற்ற அது உறுதுணையாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஆளி விதைகள் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B, இரும்புச்சத்து, புரதம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் இது உதவுகின்றன.

இதையும் படிங்க: பொடுகு தொல்லையா? இதை பண்ணுங்க...

ஒமேகா 3 ஃப்ஹாட்டி ஆசிட் , ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது, இது மூளையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு அறிவாற்றல் மேம்பட உதவுகிறது. ஆளிவிதையில் லிக்னான் மூலக்கூறுகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் இயற்கையான உற்பத்திக்கு உதவுகின்றன. மேலும், லிக்னான்கள் புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.

உடல் ஊட்டச்சத்துக்களை வீணாக வெளியேற்ற விடாமல் சரியான முறையில் உறிஞ்சுவதற்கும் ஆளி விதையின் தாவரப்பசைப்பொருள் உதவுகிறது. இந்த பிசின் போன்ற திரவமானது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும், மலச்சிக்கலை போக்கவும், வயிற்று புண்களை சரி செய்யவும் உதவியாக உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான ஹார்மோன் பிரச்சனைகளுக்கு ஆளி விதைகள் தீர்வாக அமைகிறது. இதில் உள்ள லிக்னான்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை சீராக வைக்க உதவுவதால் தலைவலி, பதற்றம், மனநிலை மாற்றம் போன்ற மெனோபாஸின் அறிகுறிகளை சமாளிக்க முடியும். அதிக உதிரப்போக்கையும் கட்டுப்படுத்த உதவுவதோடு, மார்பக புற்று நோயின் அபாயத்தை குறைக்கவும் ஆளி விதைகள் முக்கிய பங்காற்றுகிறது.

ஆளிவிதைகள் குறித்து வெளிவந்த ஆய்வுகளின் படி தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் ஒரு டீஸ்பூன் ஆளி விதைகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தலாம்.

 

 

 

இதையும் படிங்க: மேக்கப் இல்லாமலே ஜொலிக்க ஆசையா? - அப்போ கசகசா பயன்படுத்துங்க

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share