×
 

சியா சீட்ஸ் பயன் படுத்துறீங்களா ? அவசியம் இதை படிங்க

மிகவும் சிறியதாக காணப்படும் சியா விதை எண்ணற்ற ஆற்றல்களை கொண்டுள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கவும், எடையை குறைக்கவும் விரும்புவோர் இதனை எந்தெந்த வழிகளில் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

சியா சீட்ஸ், சால்வியா ஹஸ்பெனிகா என்ற தாவரத்தின் விதையாகும். நல்ல மருத்துவகுணம் கொண்ட இந்த விதைகளை மிகவும் சிறிய அளவிலே எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதுபோல அனைவரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்களால் கூறப்படுகிறது. சியா விதைகள் எண்ணற்ற ஆற்றல்கள் நிறைந்துள்ள ஒரு விதை. மாவுச்சத்து, நார் சத்து, புரதம், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற மேலும் உடலுக்கு நன்மை பயக்கும் பல மூலக்கூறுகள் இதில் அடங்கியுள்ளன.

 

சியா விதைகளில் உள்ள நார் சத்து நம் குடலில் செரிமானத் தன்மையை மேம்படுத்தும் வல்லமை கொண்டது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சியா சீட்ஸ் நாம் தினசரி சாப்பிடும் போது அத்துனுள் நிறைந்துள்ள நார் சத்தும் கொழுப்பு சத்தும் அதிகம் பசி எடுக்க விடாமல் பார்த்துக் கொள்ளும்.

இதையும் படிங்க: தலை முடி நரைக்குதா? கவலை வேண்டாம்... இதை செய்யுங்க

இரத்தத்தில் HDL மற்றும் LDL கொலஸ்ட்ராலை இது சமநிலைப்படுத்துவதால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனைத் தருகிறது. எனவே கொலஸ்டரோல் அளவை கட்டுப்படுத்த இதனை தினம் 1spoon வீதம் தண்ணீரில் கலந்து எடுத்து வரலாம்.

சக்கரை வியாதி உள்ளவர்கள் இதனை தினமும் எடுத்து வருவதால் பசியை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் சத்துக்களும் பொறுமையாக உடலில் உறியப்படும். ஆகையினால், சோர்வாகாமல் இருக்க முடியும்.

சியா சீட்ஸில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் அது எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லதாகவே உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் புதிய செல்களின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு துணையாக அமைகிறது.

 

1 டேபிள் ஸ்பூன் (12 கிராம் ) சியா சீட்ஸ்ல் ;

நார் சத்து - 4 கிராம்

புரதம் - 2 கிராம்

கால்சியம் - 75 மி. கிராம்

ஒமேகா 3 - 21/2 கி

ஒமேகா 6 - 0.7 கி
இரும்பு சத்து -1 மி. கிராம்

மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் 10 முதல் 12 சதவீதம் மொத்தத்தில் அடங்கியுள்ளது.

 

சியா சீட்ஸ்களை ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரெண்டு கிராம் வரை தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இயற்கையாக கிடைக்கும் இந்த சியா சீட்ஸ் முதலில் நம் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு பின்பு எடுத்து கொள்வது நல்லது. இதனை எளிதில் சாப்பிடும் வகையில் தண்ணீரில் ஊறவைத்தோ, பழச்சாறுகளின் மேல் தூவியும் அல்லது சாப்பாட்டில் சேர்த்தோ பயன்படுத்தலாம்.

 

இரத்தம் உறைய விடாமல் தடுக்கும் பண்பு கொண்டதால் இதய நோய்கள், இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை மேற்கொள்வோர் மருத்துவரின் ஆலோசனைப் படி தான் சியா விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்பிரின் போன்ற ப்ளட் திண்ணேர்ஸ் பயன் படுத்துவோர் எடுத்துக் கொள்ள கூடாது.

இதையும் படிங்க: போகி பொங்கலுக்கு காப்பு கட்டுவது எதற்கு ?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share