×
 

அடர்த்தியான புருவம் வேண்டுமா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்

நம்ம முகத்தையும் கண்ணையும் மிகவும் கவர்ச்சியாக காட்டுவதே நம் புருவங்கள் தான். உங்க புருவமும் நல்லா திக்கா அடர்த்தியா வளரணுமா ? அப்போ இந்த வழிகளை பின்பற்றி பாருங்க நிச்சயம் பலனடைவிங்க...

இயற்கையாக அடர்த்தியான புருவம் என்பது நம் அனைவருக்கும் அமைவதில்லை சிலருக்கு மட்டுமே வரப்பிரசாதமாக அது அமைந்து விடுகிறது. சிலருக்கு புருவத்தில் பேருக்கு மெல்லியதாக வளர்ந்து இருக்கும். அதனாலே ஐப்ரோ பென்சிலை கொண்டு வரைந்து செல்ல வேண்டி வரும். இது போன்ற நபர்கள் தற்போது வந்துள்ள ஐப்ரோ டின்டிங், மைக்ரோ பிளேடிங் போன்ற அதிகப் பணம் கொடுத்து செயற்கை வழிகளில் புருவங்களை அடர்த்தியாக மாற்றுகின்றனர். அது தற்காலிக தீர்வு தான். நம் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இயற்கையான முறையில் புருவங்களில் முடி வளர்ச்சியடைய வைக்கலாம்.

சின்ன வெங்காயத்தை இடித்து 1ஸ்பூன் அளவு சாறு எடுத்து, அதனை இரண்டு புருவங்களில் தேய்த்து வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து விடவும். கண்ணில் பட்டால் அதிகமான எரிச்சலை உண்டாக்கி விடும் அதனால் இரண்டு கண்களுக்கும் காட்டன் பஞ்சை வைத்து மூடிவிடவும், இருபது நிமிடம் அப்படியே விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்து வருவது நல்ல பலனைத் தரும். சின்ன வெங்காயத்தில் உள்ள செலீனியம், சல்பர், வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் முடி வளர்ச்சியை தூண்டி விடுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை தூண்டி விடுவதால் முடியின் வேர்களை இறுகச் செய்யும் பண்பு கொண்டது.

இதையும் படிங்க: பெண்கள் மீசை, தாடி முளைப்பதை வீட்டிலே சரி செய்யலாம்...

இரவு தூங்குவதற்கு முன்பாக விளக்கெண்ணெயை இரண்டு கை விரல்களிலும் எடுத்து அதனை புருவத்தில் தடவி மசாஜ் செய்து வரவும். இதனை அப்படியே விட்டும் தூங்கிவிடலாம். மறு நாள் காலை வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். விளக்கெண்ணெயில் உள்ள ரேசினோலிக் ஆசிட் வேதி பொருள் புருவத்தில் முடி வளர்ச்சியை தூண்டிவிடும் பண்பு கொண்டது. இதனை தினமும் தொடர்ந்து அறுபது நாட்கள் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணமுடியும்.

பூண்டு மூன்று அல்லது நான்கு பல் எடுத்து இடித்து வைத்து அதனுடன் விளக்கெண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து புருவங்களில் மசாஜ் கொடுக்கவும். இதனை முப்பது நிமிடம் அப்படியே விட்டு பிறகு கழுவி விடலாம். இதனை பகல் நேரங்களில் தொடர்ந்து 40 நாட்கள் செய்து வரலாம். விடாமல் தொடர்ந்து செய்யும் போது புருவங்களில் முடி வளர்ந்து நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும்.

வெந்தயம் தண்ணீரில் ஊற வைத்து அதனை கெட்டியான விழுதாக அரைத்து சிறிது சிறிதாக விரல்களில் எடுத்து புருவத்தில் தேய்த்து மசாஜ் கொடுத்து, பின்பு 15 நிமிடங்களில் கழுவி விடலாம். இதனை வாரம் மூன்று முறை செய்து வர நல்ல பலனைப் பெறலாம்.

ஒரு பவுலில் கற்றாழை ஜெல் 1ஸ்பூன், பாதாம் ஆயில் 10 சொட்டு அல்லது பாதாம் ஊற வைத்து அரைத்த விழுது சிறிது, ஆலிவ் ஆயில் 10 சொட்டு, விளக்கெண்ணெய் 10 சொட்டு இவற்றை ஒன்றாக கலந்து தினமும் காலை மாலை வேளைகளில் புருவங்களில் தடவி மசாஜ்கொடுத்து வந்தால் சிறிது நாட்களிலே நன்றாக வளர ஆரம்பிக்கும். இந்த கிரீம் போன்ற கலவையை பிரிட்ஜில் ஒரு வாரம் கூட சேமித்து வைக்கலாம். கண் இமைகளிலும் தடவி வர அதுவும் அடர்த்தியாக இருக்கும்.

இது போன்ற வழிகளில் இயற்கையான வழியில் புருவங்களை நாம் அடர்த்தியாக பெற முடியும்.

இதையும் படிங்க: கருப்பா இருக்க நீங்க கலரா மாறணுமா ? இதை மட்டும் செய்யுங்க

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share