ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறந்த பழம் எது? - ஆப்பிளா? மாதுளையா ?
ஆப்பிளா? மாதுளையா ? எது அதிக நன்மைகளை கொண்டுள்ளது? என்ற கேள்விக்கு மாதுளையைத் தான் மருத்துவர்கள் குறிப்பிட்டு சொல்றாங்க.
பெரும்பாலும் நாம் ஆப்பிளை தான் விரும்பி சாப்பிடுகிறோம், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் அதற்கான வரவேற்பு மட்டும் குறையவே இல்லை. மேலும் ஆப்பிள் பழம் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் அதைவிட சிறந்த பழம் இல்லை என்றும் நம்புகிறோம். ஆனால், மாதுளையின் சத்துக்கள் எண்ணில் அடங்காத நன்மைகளை நமக்கு தருகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
ஆப்பிளா? மாதுளையா ? எது அதிக நன்மைகளை கொண்டுள்ளது? என்ற கேள்விக்கு மாதுளையைத் தான் மருத்துவர்கள் குறிப்பிட்டு சொல்றாங்க.
மாதுளைப் பழத்தின் மருத்துவ குணங்கள் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கு.
மாதுளைப்பழம் மட்டுமல்ல, அதன் பூ, இலை, காய், வேர் என அனைத்துமே மருத்துவத் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், அதன் பழம் எளிதில் உண்ணக்கூடியதாக அமைந்துள்ளதால் நாம் அதனை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். தினம்தோறும் மாதுளையை சாப்பிட்டு வருவதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? என்பதை சற்று பார்க்கலாம்.
மாதுளைப் பழம் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட், பாலிஃபீனால்கள், வைட்டமின் சி, வைட்டமின் கே, மெக்னிசியம் நிறைந்தவை என்பதால் கேன்சர் கட்டிகள், கொழுப்பு கட்டிகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்கவும், உடலி்ன் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் கவசமாகவும் உள்ளது. நீரிழிவு நோய், ரத்த சுத்திகரிப்பு, உடல் எடையை குறைப்பது, மூளை ஆற்றலை மேம்படுத்துவது, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கு அருமருந்தாகவும், ஆண் பெண் என இருபாலருக்குமான குழந்தை பேறு மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மிரட்டும் ஸ்கரப் வைரஸ்...!அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன? யாரெல்லாம் உஷாராக இருக்க வேண்டும்...
வயதாகும் போது ஏற்படும் வாத நோய்களுக்கு அதன் வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவுகிறது. ஒமேகா 5 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் குறைய உதவியாக உள்ளது என்று ஆய்வில் நிரூபிக்கபட்டுள்ளது.
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட மாதுளையை நாம் தினம்தோறும் சாப்பிட்டு வருவதால் சரும நோய்களை களைந்து முடி உதிர்வை தடுத்து நல்ல உடல் பொலிவையும் அழகையும் மேம்படுத்த உதவுகிறது. ஜூஸ், சாலட், போன்று சாப்பிட்டு வருவதோடு மாதுளை பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் உடலி்ன் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது சோர்வுகள் ஏற்படாமல் நீண்ட நேரம் புத்துணர்வோடு இருக்கவும் பயன்படுகிறது.
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் கோலோச்சி வந்த மாதுளை இன்றைய நவீன மருத்துவத்திலும் பெரும் பங்காற்றி வருகிறது. எனவே, ஆப்பிளை வீட அதிக நன்மைகளை கொண்ட மாதுளைப்பழங்களை தினம்தோறும் சாப்பிட்டு பயன் அடைவோமா...
பெரும்பாலும் நாம் ஆப்பிளை தான் விரும்பி சாப்பிடுகிறோம், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் அதற்கான வரவேற்பு மட்டும் குறையவே இல்லை. மேலும் ஆப்பிள் பழம் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் அதைவிட சிறந்த பழம் இல்லை என்றும் நம்புகிறோம். ஆனால், மாதுளையின் சத்துக்கள் எண்ணில் அடங்காத நன்மைகளை நமக்கு தருகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் புது வகை காய்ச்சல் ' 'ஸ்க்ரப் டைபஸ்' ...இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்.