நம் உடலின் இயக்கத்திற்கும் ஆரோக்கியத்துக்கும் சரிவிகித உணவு தேவைப்படுகிறது. அது போல நம் மூளை மற்றும் மனதிற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் நலம் பயக்கின்றன. அந்த வகையில் வைட்டமின் b12 ஊட்டச்சத்து, நரம்பு மண்டலம், ரத்த சிகப்பணுக்கள் உருவாக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பெரிதும் பங்காற்றுகிறது. சைனோகோபாலமைன் என்று அழைக்கக்கூடிய வைட்டமின் b12 ஊட்டச்சத்து குறைவான உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு வலு குறைந்து தளர்ச்சி ஏற்படும், அதுபோல அதிகமாக சாப்பிட்டாலும் தளர்ச்சி ஏற்பட்டுவிடும். நம் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லையென்றால் அனீமியா வந்து ரத்த சோகை ஏற்படும். பெரும்பாலும் வைட்டமின் b12 குறைபாட்டால் வரும் இந்த நோய் ரத்தத்தை மட்டுமல்ல நரம்புகளையும் பாதிக்கிறது. இதனால் கை, கால், எரிச்சல், பாதத்தில் குத்துவது எனத் தொடங்கி உடல் வலுவிழந்து தள்ளாட்டம் ஏற்படும்.
தண்ணீரில் எளிதாக கரையக்கூடிய இந்த வைட்டமின் b12 சத்து, வயிற்றினால் எளிதில் உறிஞ்சப்பட்டு பின்னர் கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. பின் நம் உடலுக்கு தேவைப்படும் போது அது பயன்படுத்தப்படுகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் பரிந்துரையின் படி நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோ கிராம் அளவுக்கு வைட்டமின் b12 தேவைப்படுகிறது.
வைட்டமின் b12 பயன்கள்;
புதிய சிகப்பணுக்கள் உற்பத்தி, டிஎன்ஏ உற்பத்தி, இரத்த சோகை வராமல் தடுப்பது, கண் குறைபாடுகள் வராமல் தடுப்பது, எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுவது, மண இறுக்கம், மண நோய், மணச் சோர்வு வராமல் தடுப்பது, நல்ல உறக்கம், இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
இதையும் படிங்க: அடிக்கடி மறதி வருதா? அலட்சியம் வேண்டாம்... வைட்டமின் b12 குறைபாடாக இருக்கலாம்

வைட்டமின் பி 12 உள்ள உணவுகள் ;
சைவம் உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிட்டு வரலாம். அதில் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது. ஒரு கப் தயிரில் 28 சதவீதம் வைட்டமின் b12 உள்ளதாக கூறப்படுகிறது. இது அசைவ உணவுகளில் உள்ளதை விட எளிதில் உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மை கொண்டது. எனவே, வைட்டமின் b12 குறைபாடு உள்ளவர்கள் அதிக செலவில்லாமல் தினமும் சாப்பிட்டு வரலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள் ;
பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் டி,வைட்டமின் b12 உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு உள்ளன. மேலும், பால் சம்மந்தமான சீஸ், பன்னீர் உள்ளிட்டவைகளிலும் நிறைந்துள்ளன. 1 கப் பாலில் வைட்டமின் b1 சத்து 7 சதவீதம், வைட்டமின் b2 சத்து 26 சதவீதம், வைட்டமின் பி 5 சத்து 9 சதவீதம், வைட்டமின் b12 சத்து 18 சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது.

மீன்களில் வைட்டமின் b12;
மீன்களிலே சால்மன் மீனில் தான் வைட்டமின் b12 சத்துக்கள் நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒமேகா 3 கொழுப்புக்கள் இதில் நிறைந்துள்ளது. 178 கிராம் சல்மான் மீனில் 208 சதவீதம் வைட்டமின் b12 சத்துக்கள், 4123 mg ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நம் உடலுக்கு தேவையான புரதமும் நல்ல அளவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தானியங்களில் வைட்டமின் பி 12;
பாலிஷ் செய்யப்படாத தானியங்களில் குறிப்பாக தவிடு முழு கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் இந்த வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது. மேலும் போலேட், இரும்புசத்து, வைட்டமின் ஏ சத்துக்களும் உள்ளன. எனவே வலுவூட்டப்பட்ட தானியங்களை நாம் தினமும் தவறாது எடுத்து வந்தால் வைட்டமின் b12 நம் உடலுக்கு நாள்தோறும் கிடைக்கும்.

மாட்டிறைச்சியில் வைட்டமின் b12;
மாட்டிறைச்சியில் வைட்டமின் b12 நிறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 190 கிராம் மாட்டிறைச்சியில் 467 சதவீத டெய்லி வெலிவ் கிடைப்பதாக அமெரிக்கா அறிவியல் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது. மேலும், வைட்டமின் b2, b3, b6, ஜின்க், செலினியம் சத்துக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

சோயாவில், பாதாம், ஈஸ்ட் ;
சோயா மற்றும் பாதாமில் குறைந்த அளவு வைட்டமின் பி 12 உள்ளது. இருப்பினும் இது வீகன் உணவுகளை நாடுவோருக்கு சிறந்த தேர்வாக உள்ளது. எனவே தினமும் ஒரு கப் அளவுக்கு சோயா அல்லது பாதம் பால் எடுத்து வந்தால் 2.1 mg அளவுக்கு வைட்டமின் b12 சத்து கிடைத்து நலம் பயக்கும். வலுவூட்டப்பட்ட ஈஸ்டை உணவில் சேர்த்து வருவதும் கூட வைட்டமின் b12 கிடைக்க வகை செய்கிறது.

கல்லீரல், கிட்னி, முட்டை ;
இளம் ஆட்டின் இறைச்சியில் வைட்டமின் b12 சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக, கல்லீரல், கிட்னி ஆகியவற்றிலும் உள்ளது. 100gm ஆட்டின் கல்லீரல் 3571 டெய்லி வலீவ் உள்ளதாகவும், இது மாட்டிறைச்சியை விட அதிகம் என்றும் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும், செலினியம், காப்பர், வைட்டமின் ஏ, b2 சத்துக்களும் அடங்கியுள்ளன.
முட்டையிலும் வைட்டமின் b12, வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்துள்ளது. வெள்ளை கருவை விட மஞ்சள் கருவிலே தான் வைட்டமின் b12 அடங்கியுள்ளது எனவே முட்டை பிரியர்கள் இரண்டையும் சேர்த்தே சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சோர்வு, பலவீனம், மன இறுக்கம், கை, கால், எரிச்சல், பாதத்தில் குத்துவது, நடப்பதில் சிரமம், தோல் வெளுத்து போவது உள்ளிட்ட பிரச்சினைகள் வைட்டமின் பி 12 குறைப்பாட்டின் அறிகுறியாக இருக்கலாம். எனவே நாம் மேற்கூறிய உணவு முறைகளை பின்பற்றி வந்தால் வைட்டமின் b12 குறைப்பாட்டால் வரும் பிரச்சினைகளை தடுத்து நிம்மதியாக வாழலாம்.