×
 

சாதாரண சளியா? அல்லது நிமோனியா வா? எப்படி அறிந்து கொள்வது...

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித் தொல்லைகளை சில நேரங்களில் நிமோனியா என்றும், நிமோனியோவை அலட்சியமாகவும் விட்டுவிடுவது உயிரையே பறித்துவிடும். எனவே, சாதாரண சளியையும் நிமோனியாவையும் எப்படி கண்டறிவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக நமக்கு ஏற்படும் சளித் தொந்தரவுகளை இரண்டு வகையாக மருத்துவர்கள் பிரிக்கின்றனர். UPPER RESPIRATORY TRACK INFECTION , LOWER RESPIRATORY TRACK INFECTION என்ற வகையில் பிரித்து அதற்கேற்றாற் போல மருத்துவம் பரிந்துரைக்கப்படுகிறது. மூக்கு, தொண்டை, காது இவற்றில் தொற்று ஏற்பட்டால் அது UPPER RESPIRATORY TRACK INFECTION என்றும், நுரையீரல், நுரையீரலுக்கு செல்லும் மூச்சு குழாயில் தொற்று ஏற்பட்டால் அது LOWER RESPIRATORY TRACK INFECTION என்றும் பிரிக்கின்றனர். இதில் எந்த வகையான சளிக்கு நாம் பயப்பட வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டாலே எளிதில் பெரும்பாலான பிரச்சினைகைள தவிர்க்கலாம்.

சாதாரணமாக மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல் இதற்கு அலறியடித்து பயந்து டாக்டரிடம் ஒடி வரும் பெற்றோர்கள், சில நேரங்களில் தீவிரமான நிமோனியா தொற்றுக்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதை பற்றி நாம் தெரிவித்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. Common cold எனக் கூறக்கூடிய சாதாரண சளி என்பது வைரஸ் தோற்றால் ஏற்படக்கூடியது. இந்த கிருமி மூக்கில் தோற்று ஏற்படும் போது மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அதே கிருமி தொண்டையில் தோற்று ஏற்பட்டால் தொண்டைவலி, தொண்டை கரகரப்பு ஏற்படும், அதுவே தொண்டை வழியாக காதுக்கு சென்று தோற்று ஏற்பட்டால் காது வலி ஏற்படும். சில சமயங்களில் மூக்குக்கின் பின்னால் இருக்கக்கூடிய சைனஸ் பகுதியில் தோற்று ஏற்பட்டால் தலைவலியுடன் மூக்கில் நீர் வடிதல், மஞ்சள் நிறத்தில் நீர் வடிதல் என sinusities என்று சொல்லக்கூடிய இன்பெக்ஷன் வரலாம். இது அனைத்துமே UPPER RESPIRATORY TRACK INFECTION பெரிய அளவில் பயமில்லாமல் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் சரியாகிவிடும். இதற்கு பெரும்பாலும் ஆன்டி பயாடிக் மருந்துகள் தேவைப்படாது. தேவைப்பாட்டால் மூக்கடைப்பு வராமல் எளிதில் மூச்சு விட சளி மருந்து கொடுப்பதோடு, தொண்டைக்கு உப்பு கொண்டு வாய் கொப்பளித்து வர பரிந்துரைக்கப்படுகிறது.

சில நேரங்களில் ஆறு நாள் சளி தொந்தரவு இருந்தால் அது இருமல் ஆக வெளியில் வரும், இதனை கண்டு பயப்பட வேண்டாம். சூடான தண்ணீர் குடித்தும், இருமல் மருந்து எடுத்துக்கொண்டும் அதனை சரி செய்யலாம். எனவே இந்த 90 சதவீத சளி தொந்தரவுகளை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. 5 முதல் 10 சதவீதம் நுரையீரலில் ஏற்படும் தோற்று LOWER RESPIRATORY TRACK INFECTION இதற்குத் தான் நாம் பயம் கொள்ளவேண்டும்.

இதையும் படிங்க: ஸ்கூல் பசங்க கண்ணாடி அணிவது அதிகரிப்பு.. என்னத்தான் பிரச்சினை.? என்னத்தான் தீர்வு..?

நிமோனியா என்று சொல்லக்கூடிய நெஞ்சு சளி ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த தோற்று ஏற்பட்டால் அதனை எப்படி நாம் கண்டறிவது ? மூச்சு விடுவது வைத்தும் அதன் வேகத்தை வைத்தும் நாம் எளிதில் கண்டறியலாம், குழந்தை தூங்கும் போது அதன் அருகில் சென்று ஒரு நிமிடத்திற்குள் எத்தனை முறை மூச்சு விடுகிறார்கள் என்பதை கவனமாக எண்ணுவது மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு வயதிற்கு கம்மியாக உள்ள குழந்தை ஒரு நிமிடத்திற்கு 50 தடவைக்கும் மேல் மூச்சை வேகமாக விட்டாலோ அல்லது 1 முதல் 5 வயதுக்குள் உள்ள ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 40 தடவைக்கும் மேல் வேகமாக மூச்சை விட்டாலோ, 5 வயதுக்கும் மேல் உள்ள குழந்தை ஒரு நிமிடத்திற்கு 40 தடவைக்கும் மேல் வேகமாக மூச்சை விட்டாலோ இது நிமோனியா அல்லது நெஞ்சு சளி என்று அறிந்து கொள்ளலாம். அடுத்ததாக மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தால், தொண்டைக்கு மேல் குழிவிழுவது, நெஞ்சு கூட்டுக்கும் வயிற்றுக்கும் நடுவில் குழி விழுவது, விலா எலும்புகளுக்கு நடுவில் குழி விழுவது நுரையீரல் தொற்றின் தீவிரத்தை உணர்த்துகிறது.

குழந்தை நல்ல ஆக்டிவிட்டி அதாவது சுறுசுறுப்பு தன்மை எப்படி உள்ளது, சிரித்து விளையாடுகிறார்களா? அல்லது மிகவும் சோர்வாக காணப்படுகிறார்களா... என்பதை கவனித்து பார்க்கவும். மேலும், நுரையீரலில் வித்தியாசமான சத்தம் கேட்பதாக தெரிந்தால் தாமதிக்காமல் உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லவும்.எனவே, மேற்கூறிய விஷங்களை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு, அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

சளி, இருமல் மட்டுமே வைத்துக்கொண்டு அது நிமோனியா என தவறாக எண்ணுவதை விட ஆரம்ப கட்ட நிமோனியா தாக்குதலை எளிமையான வகையில் கண்டறிந்து குழந்தையின் உயிரை நாம் காப்பாற்றலாம்.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share