×
 

மேக்கப் இல்லாமலே ஜொலிக்க ஆசையா? - அப்போ கசகசா பயன்படுத்துங்க

பொதுவாக கசகசாவை சமயலுக்காகவும் மருத்துவரீதியாகவும் நாம் பயன் படுத்திவருகிறோம் . ஆனால், அதனை முகத்தில் தடவி வருவதால் ஏற்படும் நன்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும்.

நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய கசகசா பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. குளிற்காலங்களில் ஏற்படும் சரும வெடிப்பு, தோல் வறண்டு போவது ஆகியவற்றை மாற்றி நல்ல பொலிவை தருகிறது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது கட்டாயம்.

ஜொலிக்கும் சருமம் மற்றும் முகப்பொலிவு பெற தயிர் உடன் கசகசாவை கலந்து ஸ்க்ரப் பேக்காக்க  செய்து மென்மையாக மசாஜ் கொடுத்து 10 நிமிடம் அப்படியே விட்டுவி்ட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குழந்தை போன்ற மிருதுவான மென்மையான சருமத்திற்கு கசகசாவை பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே போதும், சருமம் நன்றாக நீரேற்றம் பெற்று பளபளப்புடன் இருக்கும்.

இதையும் படிங்க: ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறந்த பழம் எது? - ஆப்பிளா? மாதுளையா ?

லினோலிக் அமிலம் கொண்ட பாப்பி விதைகள் உங்கள் சருமத்தை வலுப்படுத்தவும் சதைகளில் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. கசகசாவை பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து,  சிறிது எலுமிச்சை சாறுடன் அரைத்து மென்மையான பேஸ்டாக உருவாக்கவும். இப்போது இதை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவினால் அரிப்பு, வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி குறையும். இந்த பேஸ்ட் தீக்காயங்களுக்கு கூட நல்ல வெளிப்பூச்சு மருந்தாக பயன்படும்.

ஒரு டீஸ்பூன் கசகசா பவுடருடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லைக் கலந்து  15 நிமிடங்கள் முகத்தில் தடவி வர கரும்புள்ளி, தோல் அரிப்பு, வெயிலினால் ஏற்பட்ட கருமை நிறம் மாற உதவும். ஒரு டீஸ்பூன் கசகசா தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு துளி தேன் கலந்து 10 நிமிடங்கள் தடவி வர அரிப்பு, தோல் எரிச்சல், முகப்பரு தழும்புகள் அகலும்.  ஓட்ஸ் மற்றும் அரை ஸ்பூன் தேன்சேர்த்து தடவி வர முதுமையை தள்ளிபோட உதவும்.
ஒரு டீஸ்பூன் கசகசா தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து தடவி  வர தொங்கும் சதைகளை இருகச் செய்ய உதவுகிறது.

இவ்வாறு நமக்கு எளிதில் கிடைக்க கூடிய கசகசாவை பல்வேறு விதங்களில் பயன்படுத்தி பயன்பெறலாம்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share