×
 

கட்டிட தொழிலாளிக்கு மறுவாழ்வு ...தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை..!

முதன் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடத் தொழிலாளிக்கு தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

விருதுநகர் மாவட்டம் சவரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது  கரந்தமலை . கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருக்கும்போது  தவறி விழுந்து தோள்பட்டையில் காயமடைந்தார்.

முதல்கட்டமாக நாட்டு வைத்தியம் பார்த்து சரியாகாததால், அங்கிருந்து விருதுநகர் அரசு மருத்துவமனை  அதன் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனை செய்தபோது, கரந்தமலையின் தோள்பட்டை எலும்பில் தலைப்பகுதி இல்லாமல் உடைந்திருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது  5 லட்சம் ரூபாய் வரை அறுவை சிகிச்சைக்கு செலவாகும் என்றதை அடுத்து
 உறவினர்களின் ஆலோசனைப்படி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி சிகிச்சைக்கு  சேர்ந்தார்

இதையும் படிங்க: மிரட்டும் ஸ்கரப் வைரஸ்...!அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன? யாரெல்லாம் உஷாராக இருக்க வேண்டும்...

 அவருக்கு எலும்பு முறிவு பிரிவு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் பிரேம்குமார் , தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்து சித்ரா அடங்கிய மருத்துவ குழுவினர்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம்  தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
 கடந்த மாதம் 24 ஆம் தேதி,
 செயற்கை மூட்டு பொருத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன் முறையாக  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சில நாட்களில் கரந்தமலை பூரண குணமடைந்தார்
இதேபோல தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த 45 வயது  ஜெயலட்சுமி  என்ற பெண்ணிற்கும் வலது கை மூட்டு பகுதியில் பந்து பகுதி உடைந்த நிலையில்  அவருக்கும் செயற்கை மூட்டு பொருத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 
இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுக்கு கரந்தமலை மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

 

இதையும் படிங்க: மிரட்டும் ஸ்கரப் வைரஸ்...!அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன? யாரெல்லாம் உஷாராக இருக்க வேண்டும்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share