×
 

போகி பொங்கலுக்கு காப்பு கட்டுவது எதற்கு ?

மூலிகை செடிகளை கொண்டு காப்பு கட்டும் பழங்காலம் நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. குறிப்பாக தைப்பொங்கலுக்கு முந்தய நாளான போகி அன்று இது கடைபிடிக்கப்படுகிறது. காப்பு கட்ட என்னென்ன மூலிகை செடிகளை பயன் படுத்துவார்கள் என்பதை பார்க்கலாம்.

பழையன கழிதலும் புதிய புகுதலும் போகி பண்டிகையின் முதன்மையான வாசகமாக உள்ளது. நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள், கவலைகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தி எதிர் வரும் நாட்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதே, இதன் நோக்கம். இயற்கைக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை வரவேற்கும் காலத்தில் குளிரும் மழையும் மாறி மாறி வரும் .

இந்த காலநிலை மாற்றத்தால் பெரியம்மை, சிறியம்மை, காலரா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமுண்டு. இதற்கு வேம்பு, ஆவாரை,சிறுபீளை,மாவிலை, துளசி, பிரண்டை ஆகிய இலைகளை ஒன்றாக சேர்த்து கட்டுவதும், தோரணமாக காட்டுவதும் வழக்கமாக உள்ளது.

இதையும் படிங்க: ஆவாரம் பூவில் இத்தனை நன்மைகளா? - எப்படி பயன்படுத்தலாம்

தைப் பொங்கல் , மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகை விடுமுறைகளுக்கு, பிழைப்புத் தேடி வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். தங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாகவும் சந்தோஷத்துடனும் பண்டிகையை கொண்டாடி மீண்டும் பிழைப்புக்கு ஊர் செல்லவேண்டும். இதற்கு ஆரோக்கியமான சுழ்நிலை வேண்டும். அதற்கு காப்பு கட்டுதல் மிகவும் பயன் தரும்.

மேலும், இந்த காலங்களில் விஷப்பூச்சிகள், மூட்டை பூச்சிகளும் உற்பத்தி ஆகி வீட்டுக்குள் வரும். இதனை இயற்கையாக தடுக்கும் மருந்தாகவும் பூச்சி கொல்லியாகவும் காப்பு கட்டுதல் இருக்கும். தை மாதத்தில் அறுவடை முடிந்து உணவுப் பொருட்கள் வீட்டுக்கு வரும் சமயத்தில் பூச்சிகள் தாக்கி வீணாகாமல் இருக்கவும் காப்பு கட்டப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஒரு வருடத்திற்கு இந்த உணவுப் பொருட்கள் சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

விவசாயத்திற்கு பெரிதும் பயன்படும் ஆடு, மாடுகளும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தொழுவத்திற்கும் காப்பு கட்டும் முறை பின்பற்றப்படுகிறது.

இதையும் படிங்க: செம்பருத்தி பூ கிடைச்சா மிஸ் பன்னாதீங்க

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share