இந்தக் காய்களை சாப்பிடுங்கள்.. சிறுநீரகங்கள் பாதுகாப்பாக இருக்கும்.!
சிறுநீரகங்களைப் பாதுகாப்பற்கான உணவு வகைகள் உண்பது மிகவும் முக்க்ஜ்யம் என்கின்றனர் மருத்துவர்கல்
சிறுநீரகங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ரத்தத்தில் இருந்து யூரியா போன்ற உப்புகளைப் பிரித்து ரத்தத்தைச் சுத்திகரிப்பது சிறுநீரகங்களின் முதன்மைப் பணி. சிறுநீரகம், உடலில் நீரின் அளவைச் சமநிலையில் வைத்துக்கொள்கிறது. ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக்கொள்வதுடன் ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருள்களை நீக்க உதவும் சிறுநீரகங்களைப் பராமரிக்கச் சத்தான உணவு வகைகள் சில:
பீட்ரூட்: இதிலுள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்துக்கு உதவுகிறது; உடலில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்க சிறுநீரகத்திற்கு பீட்ரூட் உதவுகிறது.
வள்ளிக்கிழக்கு: சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுப் பொருள்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கும் ஒன்று. இது ரத்த அழுத்தம், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைச் சீர்ப்படுத்துகிறது.
பூண்டு: உணவில் பூண்டைச் சேர்ப்பதன் மூலம் சுவை கூடுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் வலிமை சேர்க்கிறது. ரத்த அழுத்தம், கொழுப்பைச் சீர்செய்து சிறுநீரகங்களைப் பாதுகாக்கிறது.
கீரைகள்: கீரையில் இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பிற சத்துகளும் நிறைந்துள்ளன. எனினும் கீரையில் ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பவர்கள் இதை அளவாகச் சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: உங்கள் கிட்னி பாதிப்பில் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம்..!!
இதையும் படிங்க: உலக kidney தினம்: கிட்னி சரி இல்லேன்னா சட்னி ஆகிடுவீங்க... மக்களே இதை மட்டும் செய்யுங்கள்..!