முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்க உருளைக்கிழங்கு போதும்...இது சாத்தியமா?
உங்களுக்கு வாயை சுற்றி, கழுத்தை சுற்றி கருமை நிறமாக உள்ளதா ? தைராய்டு பிரச்சினைகள் இருந்தால் இது கண்டிப்பாக வரும். நம் தோலின் நிறத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதை பார்க்கலாம்.
அதிக நேரம் மொபைல் போன் பார்த்துக் கொண்டு இருப்பது, வேலைப்பளு போன்ற காரணங்களால் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தூக்கமின்மை, மன அழுத்தத்தால் தைராய்டு போன்ற பிரச்சினைகள் எளிதில் ஏற்பட்டு வாய், கண், மற்றும் கழுத்து பகுதிகளில் கருமை நிறத்தை தந்து முகம் பொலிவின்றி காணப்படுவர். அதிகப்படியான வெயிலில் சுற்றினாலும் கருமை நிற புள்ளிகள் தோன்றும். மேலும், சக்கர வியாதி, கொலஸ்டரோல், மெனோபாஸ் சமயங்களில் கூட இது தோன்றலாம்.
காய்ச்சாத பால் ;
முதலில் காய்ச்சாத பாலில் உள்ள லாக்டிக் அமிலம் பிக்மென்ட்டேஷன் மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. எனவே நாம் காய்ச்சாத பாலை ஒரு காட்டன் பஞ்சை வைத்து நனைத்து அதனை முகம், கழுத்து பகுதிகளில் ஒத்தி எடுத்து வரவும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை இதை செய்து வரவும். இது ஓபன் போர்ஸை நன்றாக மூடி விடும் பண்பை கொண்டதாகவும் உள்ளது .
இதையும் படிங்க: முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே
துருவிய உருளைக்கிழங்கு ;
வெயிலில் சென்று வீடு திரும்பும் போது ஏற்படக்கூடிய ஸ்கின் டான் ஐ அகற்றி சில நிமிடங்களில் பழைய நிறத்தை மீட்டெடுக்க, துருவிய உருளை கிழங்கை பிழிந்து கிடைக்கும் சாற்றை அப்படியே முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் போதுமானது.
உருளை கிழங்கு பேஸ்ட் ;
உருளை கிழங்கை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் மைய அரைத்துக்கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக கழுவிய பின் இந்த பேஸ்ட் உடன் சிறிது பால் சேர்த்து முகம் முழுக்க நன்றாக தடவி அதனை 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் கருமை நிற புள்ளிகள் விரைவில் மறைந்து பளிச் சருமம் கிடைக்கும்.
உருளை கிழங்கு அரிசி மாவு மாஸ்க் ;
1 தேக்கரண்டி அரைத்த உருளை கிழங்குடன் 1 தேக்கரண்டி அரிசி மாவை சேர்த்து முகத்தி்ன் அனைத்து இடங்களிலும் வட்டமாக தேய்கவும். பத்து நிமிடம் கழித்து மீண்டும் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். முடிந்தளவு ஈரப்பதமாக முகத்தை வைத்துக் கொள்வது நல்லது. அதற்கு மாய்சூரைசர் கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இதனை வாரம் மூன்று முறை செய்து வரவும்.
உருளைக்கிழங்கு கற்றாழை மாஸ்க் ;
உருளைக்கிழங்கு பேஸ்ட் 1 தேக்கரண்டி, கற்றாழை 1 தேக்கரண்டி, வைட்டமின் ஈ கேப்ஸுல் அல்லது பாதாம் எண்ணெய் 10 சொட்டு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து அதனை முகத்தில் தடவி, நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வரவும். இது முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து முகப்பொலிவோடு இருக்க உதவுகிறது.
கரும்புள்ளிகள் மறைய நாம் வாழ்வியல் பிரச்சினைகளை சரி செய்து உடலை பராமரித்து, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தையும் சரி செய்து கொள்ள முயற்சித்தால் சிறந்த பலனை பெறலாம்.
இதையும் படிங்க: முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே