×
 

மாரடைப்பு ஏற்படும் சில வாரங்களுக்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்.? மிஸ் பண்ணக் கூடாத அறிகுறிகள்.!

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு எட்டு வகையான அறிகுறிகளை உடல் காட்டும். அவை என்னென்ன?

திடீரென ஏற்படும் மாரடைப்பால் உயிரிழப்புகள் நிகழ்வது குறித்து செய்திகளில் அவ்வப்போது பார்க்கிறோம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்றால் குறைந்தபட்சம் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்னரே உடலின் இயக்கத்தில் முக்கியமான எட்டு அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்படும் ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த எட்டு அறிகுறிகள்:

சோர்வு: உடலில் ஏற்படும் அசாதாரண சோர்வு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிதான். உடல் உழைப்பு, மன குழப்பத்தினால் ஏற்படும் சோர்வுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு நாளும் அதிகளவில் சோர்வாக காணப்படுவார்.

அடி வயிற்று வலி: வயிற்று குமட்டல், வயிற்று பகுதியில் ஏற்படுகிற திடீர் வீக்கம், அடி வயிற்று வலி அல்லது வயிற்று பகுதி முழுவதும் வலி போன்றவை ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு வயிற்று வலி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படிங்க: கொழுப்புச் சத்தை உணவுகள் மூலம் எப்படி குறைக்கலாம்.? இதோ பட்டியல்..!

மூச்சு திணறல்: ஒருவர் மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உண்டு. இந்த அறிகுறியின் மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே ஒருவருக்கு மாரடைப்பு வரவுள்ளதை அறிந்து கொள்ள முடியும். தலைசுற்றல், சுவாசிக்க போதுமான காற்று இல்லாதது போன்ற அறிகுறி மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வரலாம்.

தூக்கமின்மை: தூங்குவதற்கு சிரமப்படுவது, தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பது, விடியற் காலையில் கண் விழித்துவிடுவது போன்றவை தூக்கமின்மை நோயின் அறிகுறி. தொடர்ச்சியாக ஒருவர் தூங்க சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர அதுவே காரணமாக அமையலாம்.

முடி உதிர்தல்: மாரடைப்பு ஏற்படுவதற்கு வெளிப்படையான அறிகுறி முடி உதிர்தல். ஹார்மோன் கோளாறுகளால் ஒருவருக்கு வழுக்கை விழுந்தாலும் அது மாரடைப்போடு தொடர்பு இருக்கலாம்.

அதிகமாக வியர்த்தல்: மன சோர்வு, பதற்றம் போன்ற காரணங்களால் ஒருவருக்கு அதிகம் வியர்வை வெளியேறினால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சீரற்ற இதய துடிப்பு: ஒருவருக்கு இதயம் சீராக துடிப்பதில் பிரச்சினை இருந்தால், அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். முறையற்ற உடற்பயிற்சி, பயம், கவலை, பதற்றம் போன்றவை சீரற்ற இதய துடிப்புக்கு காரணமாக அமைகிறது. சீரற்ற இதய துடிப்போடு மயக்கம், சோர்வு முதலியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

நெஞ்சு வலி: இடது கை, கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதி போன்ற இடங்களில் வலி பரவலாகவும், மார்பு பகுதியில் வலி இருப்பதையும் உணர முடிந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரி

இதையும் படிங்க: கருப்பாக இருப்பது குற்றமா..? தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் வேதனை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share