தலைமுடி முதல் பாதம் வரை உள்ள பிரச்சினைகளுக்கு அனைத்திற்குமே இது தீர்வாக உள்ளது. தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர செம்பருத்தி பூவை மிக்சியில் நன்றாக அரைத்து சாறு எடுத்து கொள்ளவேண்டும். அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி , வடிகட்டி, ஆறவைத்து பின் தினமும் தலைக்கு தேய்த்து வரவும்.
பேன் தொல்லை நீங்கவும் முடி உதிர்வை தடுக்கவும் செம்பருத்தி பூவை, வேம்பு இலையுடன் நங்கு அரைத்து அதனை தேய்த்து 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கலாம். தோல் மற்றும் முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்க செம்பருத்தி பூவுடன் பசும் பால் சேர்த்து அரைத்து தேய்த்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த செம்பருத்தி பூக்களின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர கட்டுக்குள் வைக்கலாம். மேலும், அதனை தண்ணீரில் வேக வைத்து குடித்து வந்தால் கருப்பை பலம் பெரும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று நீங்கவும் எரிச்சலை கட்டுப்படுத்தவும் செப்பருத்தி பூக்களை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை தொடர்ந்து பருகி வர பயன் அடையலாம். மேலும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரை பெருக்கவும் செய்கிறது.
இதயத்திற்கு செம்பருத்தி சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. அதனை பசும் பூக்களாக அல்லது காய வைத்து அரைத்து பொடி செய்து கொண்டு பசும் பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர இதயம் பலம்பெற்று அற்புதமாக செயல்படும்.

நாள்பட்ட வாய் மற்றும் வயிற்று புண் குணமாக வெறும் வயிற்றில் செம்பருத்தி பூவை மென்று தின்றால் போதுமானது. மேலும், தொடர்ந்து செம்பருத்தி பூவை தினமும் சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யவும் உதவுகிறது.
செம்பருத்தி பூவை காய வைத்து அரைத்த பொடியுடன் மருதம் பட்டை தூள் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து அதிகமாவதோடு இரத்த சோகை நீங்கும்.