×
 

தாய்லாந்து, மியான்மர் நிலநடுக்கம்: 3 வாரங்களுக்கு முன்பே கணித்த இளம் ஜோதிடர்..!

இந்த பயங்கரமான பூகம்பத்தை அபிக்யா ஆனந்த் 3 வாரங்களுக்கு முன்பே கணித்ததாகக் கூறப்படுகிறது.

தாய்லாந்து, மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாங்காக்கில் 186பேர் மரணமடைந்தனர்.  மியான்மரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, மியான்மரில் இன்று பிற்பகல் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில், 90 பேர் காணாமல் போயுள்ளனர். தாய்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் பும்தம் வெச்சாயாச்சாய் இந்த தகவலை தெரிவித்தார்.

இந்த பயங்கரமான பூகம்பத்தை அபிக்யா ஆனந்த் 3 வாரங்களுக்கு முன்பே கணித்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 1 ஆம் தேதி அபிக்யாவின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த காணொளியில், அடுத்த சில வாரங்களில் அல்லது இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. 

அபிக்யாவுக்கு 20 வயது. 11 வயதிலிருந்தே ஜோதிடம் கற்று வருகிறார். கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த அபிக்யா ஆனந்த், இளைய ஜோதிடர். அவர் 7 வயதிலேயே பகவத் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்தார். அபிக்யா மிகச் சிறிய வயதிலேயே சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். இதைச் செய்ய தனது தாயார் தன்னை ஊக்குவித்ததாக அவர் கூறினார். அபிக்யா ஒரு வீடியோ சேனலை நடத்துகிறார். அதில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. அதில் அவர் பல பெரிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! ரூ.37,216 கோடியில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

இந்த நிலநடுக்கத்தை அவர் 3 வாரங்களுக்கு முன்பே கணித்திருந்தார். இது தவிர, தேதி, இடங்கள் பற்றிய தகவல்களையும் ஒரு வரைபடம் மூலம் வழங்கியிருந்தார். ​​கிருஷ்ணர் இந்த பாதையை பின்பற்ற தன்னை வழிநடத்தியதாக அபிக்யா கூறுகிறார்.அவர் சமஸ்கிருதம், ஜோதிடம் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், இப்போது அவர் 2018-ல் தொடங்கப்பட்ட தனது பிரஜ்னா ஜோதிஷ் நிறுவனத்தின் மூலம் 1200 குழந்தைகளுக்கும் 150 ஆராய்ச்சியாளர்களுக்கும் கற்பித்து வருகிறார். அபிக்யா வெறும் 12 வயதிலேயே வாஸ்து சாஸ்திரத்தில் பட்டப்படிப்பைப் பெற்றார்.

அபிக்யாவின் சேனலின்படி, அவர் இதற்கு முன்பு பல கணிப்புகளைச் செய்ததாகவும், அவை உண்மையாகி விட்டதாகவும் கூறுகிறார். முன்னதாக, அபிக்யான் ஏற்கனவே 2020-ல் கோவிட், 2022-ல் ரஷ்யா-உக்ரைன் போர், 2023-ல் ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல், 2024-ல் வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி கணித்துள்ளார்.

இதையும் படிங்க: அடியோடு மாறப்போகும் ஆட்டோ- டாக்ஸி டிரைவர்களின் வாழ்க்கை: ஓலா-ஊபருக்கு ஆப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share