11 ஏர்பேக்குகள்.. 502 கிமீ ரேஞ்ச்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. அசத்தும் BYD மின்சார கார்
தற்போது BYD Sealion 7 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த மின்சார கார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 502 கிமீ வரை ரேஞ்சை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
BYD நிறுவனத்தின் புதிய மின்சார suv மாடலான sealion 7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே டீலர் ஷோரூம்களுக்கு வந்துவிட்டது. இந்த கார் இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போ 2025 கண்காட்சியில் முதன்முதலில் காணப்பட்டது. விரைவில் இந்திய சாலைகளில் இந்த கார் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் வந்த பிறகு, kia மற்றும் hyundai மின்சார கார்களுக்கு இது கடுமையான போட்டியாக இருக்கும்.
இந்தக் காரின் அம்சங்கள் மற்றும் அதற்கான முன்பதிவுகள் தொடர்பான தகவல்களை இங்கு விரிவாகப் பார்ப்போம். இந்த கார் தற்போதைய டீலர்ஷிப்பில் கருப்பு மற்றும் நீலம் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. byd sealion 7 காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்ய, ₹70,000 டோக்கன் தொகையாக செலுத்த வேண்டும். இந்தக் காரை வாங்க விரும்புபவர்கள் இந்த தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
byd sealion 7 இரண்டு வேரியண்டுகளில் அறிமுகமாகிறது. முதல் வேரியண்ட் rwd (rear-wheel drive) மாடலாக இருக்கும். இதில் 82.5 kwh கொள்ளளவு கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது 308bhp பவரும் 380nm டார்க்கும் உருவாக்கும். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 482 கிமீ வரை பயணிக்க முடியும். இரண்டாவது வேரியண்ட் awd (ஆல்-வீல் டிரைவ்) மாடலாக இருக்கும். இதில் 523bhp பவரும் 690nm டார்க்கும் உருவாக்கும். இந்த மாடல் ஒருமுறை முழுதாக சார்ஜ் செய்தால் 502 கிமீ வரை மைலேஜ் வழங்கும்.
இதையும் படிங்க: வெறும் 100 பேருக்கு மட்டும் தான் இந்த ராயல் என்ஃபீல்ட் பைக் கிடைக்கும் - அப்படி என்ன ஸ்பெஷல்?
அதிக பவரும் அதிக மைலேஜும் தேவைப்படுபவர்கள் இந்த மாதலை தேர்வு செய்யலாம். byd sealion 7 காரில் பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முழு led லைட்டிங், பெரிய பனோராமிக் சன்ரூப் இருக்கும். 15.6-இன்ச் திரும்பக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம் கிடைக்கும். adas தொழில்நுட்பம், 11 ஏர்பேக்குகள், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்-அப் டிஸ்பிளே (hud), 10.25-inch டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே உள்ளிட்டவை இதில் அம்சங்கள் உள்ளன.
மேலும், வெண்டிலேஷன் வசதியுள்ள முன்புற இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காரின் விலையை byd நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், மார்க்கெட்டில் இது mg zs ev, hyundai ioniq 5, kia ev6 போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.