×
 

குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் இ-ஆக்சஸ் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த சுசுகி.!

சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIL) நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இ-ஆக்சஸ் என பெயரிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

சுசுகி நிறுவனம் இ-ஆக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இல் வெளியிடப்பட்டது. 3.07 kWh லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரியால் இயக்கப்படும் இ-ஆக்சஸ், ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்ச வேகம் 71 கிலோமீட்டராக அமைக்கப்பட்டுள்ளது. இ-ஆக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இரு வகையான சார்ஜிங் விருப்பங்களை வழங்குகிறது.

இதில் சாதாரண சார்ஜிங் மூலம் 6 மணி நேரம் 42 நிமிடங்களில் பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்யலாம். அதேசமயம் வேகமான சார்ஜிங் மூலம் 2 மணி நேரம் 12 நிமிடங்களில் முழு சார்ஜ் முடிகிறது. இது பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இந்த அறிமுகத்தில், சுசுகி தனது ஜிக்ஸர் SF 250 ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மோட்டார் சைக்கிளையும் அறிமுகப்படுத்தியது. இந்த 250 சிசி பிஎஸ் VI இணக்கமான பைக், பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த E85 எரிபொருளை ஆதரிக்கக்கூடியதாக உள்ளது. மேலும், இது ஸ்போர்ட்டி தோற்றத்துடன், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: ரூ.79,999 விலையில் கிடைக்கும் ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; மைலேஜ் எவ்வளவு தெரியுமா?

இது மட்டுமல்லாமல், சுசுகி புதிய அக்சஸ் 125 சிசி ஸ்கூட்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் LED லைட்டிங், புளூடூத் இணைந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஒற்றை சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் என்ஜினுடன் திகழ்கிறது. பயணிகள் தினசரி தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாருதி சுசுகி, e VITARA என்ற மின்சார SUV-யை 61 kW பேட்டரி பேக்குடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் செல்லும். மேலும், 100க்கும் மேற்பட்ட நகரங்களில் வேகமான சார்ஜிங் நிலையங்களை நிறுவுமென்றும், வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் ஹோம் சார்ஜரையும் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.  

இதற்கிடையில், ஹூண்டாய் க்ரெட்டா மின்சார SUV-யின் புதிய பதிப்பை வெளியிட்டது. ரூ.17,99,000 என்ற ஆரம்பவிலையுடன் கிடைக்கும் இந்த மாடல், ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 473 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மின்சார வாகன பிரிவில் ஹூண்டாயின் பலத்த நுழைவாக இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குறைந்த விலையில் டிவிஎஸ் என்டார்க் 125 கிடைக்குது.. விலை எவ்வளவு தெரியுமா.?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share