×
 

உங்கள் வீட்டில் மஹாலக்ஷ்மி அருள் வேண்டுமா? இந்த முறை பூஜை அதற்கு வழி கொடுக்கும்

நம் வீட்டில் என்றென்றும் குறையாத தனவரவு, செய்யும் தொழில் மற்றும் எடுத்த காரியத்தில் வெற்றி, குடும்பத்தில் நிம்மதி, சந்தோசம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு மஹாலக்ஷ்மியின் அருள் வேண்டும்.

இன்றைய நவீன உலகில் பணத்தேவை என்பது அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் மாறி வரும் பழக்க வழக்கத்தால் தேவைகள் அதிகரித்து சுக போக வாழ்க்கையை நாடிச் செல்வதால் பணப் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் நம் வீட்டிலுள்ள நகையை அடமானம் வைத்து வாழ வேண்டிய சூழலும் வந்து விடுகிறது. இதனால் அதிக சம்பளத்தை தேடி இளைங்கர்கள் வீட்டை விட்டு நெடு தூரம் கூட பயணம் செய்து சம்பாதிக்கும் சூழலில் தள்ளப்படுகிறார்கள். இதனை எளிமையான வழிபாட்டின் மூலம் செல்வத்தை நாம் ஈர்த்து வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு நாம் எடுத்த காரியாயத்தில் வெற்றியை தந்து செல்வ செழிப்போடு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ துணையாக அமைகிறது. மஹாலக்ஷிமி வழிபாடு வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து செய்வதால் செல்வத்தை எளிதில் வசியம் செய்ய முடியும்.

மஹாலகஸ்மியை வசியம் செய்ய நம் பூமியிலுள்ள மண் தான் பிரதானமாக உள்ளது. அதனால் சிறிய அளவில் ஒரு நல்ல மண் பானையை தேர்வு செய்து வாங்க வேண்டும். கல் உப்பு தேவைப்படும் அளவுக்கு எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் அரிசி மூன்று கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். சக்தியின் ரூபமாக கருதக் கூடிய எலுமிச்சை பழம் ஒன்று. ஏழுமுகம் கொண்ட ருத்ராட்சம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் சிவபெருமான் தான் மகாலட்சுமிக்கு சகல வஸ்துக்கள் அருளை வரமாக வழங்கினார் என்பதால் அவரை வழிபடும் விதமாக ஏழுமுகம் கொண்ட ருத்திராட்சம் வாங்கிக் கொள்ளவேண்டும். மஹாலகட்சுமியின் ரூபமாகா ஒரு 1 ரூபாய் நாணயம் மற்றும் வாசனை மலர்களில் மல்லிகை பூ எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்ததாக மிக முக்கியமாக வெற்றிலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பூஜை வெள்ளிக்கிழமைகளில் விடியற்காலையில் 4 மணி முதல் 6 மணிக்குள் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் செய்து விட வேண்டும்.

இதையும் படிங்க: பணப்புழக்கம் அதிகரிக்கணுமா? படிகாரம் உதவியா இருக்கும்

செய்முறை ;

முதலில் ஒரு தாம்பூலத்தத் தட்டில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்த கல் உப்பை போட்டு பரப்பி விட்டு, அதன் மேல் மஞ்சள் அரிசியை பரப்ப வேண்டும். மண் பானையில் மங்களகரமாக மஞ்சள் தடவி அதன் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் கட்டி மூன்று முடிச்சு போட வேண்டும். இவ்வாறு செய்தால் மஹாலஷ்மியை வசியம் செய்ய முடியும். அடுத்தது இந்த பானையை ஏற்கனவே பரப்பி வைத்த அரிசியின் மேல் வைத்து அதனுள் கல் உப்பை கொண்டு நிரப்ப வேண்டும். நாம் நிரப்பும் ஒவ்வொரு முறையும் 'ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமோஸ்துதே' என்ற இந்த மந்திரத்தை சொல்லவும். உப்பைக்கொண்டு பானையை முழுவதுமாக நிறைத்த பின் சக்தியின் அம்சமாக உள்ள எலுமிச்சையை அதன் மேல் வைத்து குங்குமத்தையும் இட வேண்டும். பிறகு ஏழுமுக ருத்திராட்சம் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை சேர்த்து வைக்க வேண்டும். கூடவே சிறிதளவு மல்லிகை பூ வைத்து பின்பு பானைக்கு மல்லிகை பூவால் அலங்காரம் செய்யவும். மல்லிகை பூ மஹாலக்ஸ்மிக்கு மிகவும் பிடித்த பூ எனவே வசியம் எளிதில் நடக்கும்.

 

விளக்கேற்றும் முறை;

15 அகல்விளக்குகள் எடுத்து வைத்துக் கொண்டு அதில் 9 அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். அவைகளை தாம்பூலத்தட்டிலுள்ள மண் பானையை சுற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக அதன் எதிரே ஆறு வெற்றிலைகளை அடுக்கி அதன் மேல் மஞ்சள் குங்குமம் பூ வைத்து மீதமுள்ள 6 அகல்விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையின் மீது வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இப்போது நாம் வைக்கும் கோரிக்கையை ஒவ்வொன்றாக சொல்லி மஹாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். மஹாலக்ஷ்மி தேவியின் மந்திரங்களை சொல்லி தீப தூப ஆராதனை செய்து வழிப்பட்டு வந்தால் நிச்சம் நினைத்தது நடக்கும். தனவசியம் சௌபாக்கியம் நிறைந்திருக்கும்.

இதையும் படிங்க: வெற்றிலை தீபம் எப்போது, எங்கு ஏற்ற வேண்டும் ?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share