பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் தரும் தரமான கார்கள் - முழு லிஸ்ட் உள்ளே!
இந்திய சந்தையில் சிறந்த மைலேஜுக்கு பெயர் பெற்ற பல கார்கள் உள்ளன. இதன் விலை அனைவரும் வாங்கக்கூடிய வகையில் ஆரம்பிக்கிறது.
இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் பல கார்கள் உள்ளன. ஒரு புதிய கார் வாங்கும் போது, அதன் மைலேஜ் எவ்வளவு என தெரிந்து கொள்ள முதலில் யோசிப்போம். நீங்கள் ஒரு புதிய கார் வாங்க திட்டமிட்டு, அதுவும் அதிக மைலேஜ் தரும் கார்களை விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்ட சில கார்கள் உங்களுக்கு சிறந்தவை தேர்வாக இருக்கும்.
முதலாவது கார் மாருதி சுசுகி வேகனார் ஆகும். இது மனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் 24.35 கிமீ/லி மற்றும் ஏஎம்டி மாடலில் 25.19 கிமீ/லி மைலேஜ் வழங்குகிறது. இந்த ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சமாக உள்ளது. நல்ல மைலேஜுடன் சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடிய காராக இது பரிந்துரைக்கப்படுகிறது.
இரண்டாவது மாருதி சுசுகி செலரியோ ஆகும். இது இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன் மனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் 25.24 கிமீ/லி மைலேஜ் வழங்குகிறது, மற்றும் ஏஎம்டி மாடல் 26.68 கிமீ/லி மைலேஜ் தருகிறது. இதன் அதிக மைலேஜிற்குக் காரணம் டூயல் ஜெட் என்ஜின் ஆகும். இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.5.45 லட்சமாக உள்ளது.
இதையும் படிங்க: உங்கள் சிஎன்ஜி கார் குறைந்த மைலேஜ் தருகிறதா.? உடனடியாக இதை பண்ணுங்க.!
மூன்றாவது கார் மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ ஆகும். இது செலரியோ போன்றே புதுப்பிக்கப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த ஹேட்ச்பேக் காரின் மைலேஜ் 24.12 கிமீ/லி முதல் 25.30 கிமீ/லி வரை வழங்கப்படுகிறது. கூடுதலாக, இதில் ESP, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏர்பேக் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா சிட்டி 5வது தலைமுறை காரும் அதிக மைலேஜ் தரக்கூடிய பிரீமியம் செடான் ஆகும். இதன் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின், 5-ஸ்பீட் மற்றும் 6-ஸ்பீட் மனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் கிடைக்கிறது. இது 24.1 கிமீ/லி மைலேஜ் தரும், மேலும் ஆரம்ப விலை, ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் வசதிகளை வழங்கும்.
மாருதி சுசுகி டிசையர் சிறந்த மைலேஜ் தரும் செடான் ஆகும். இது 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இதன் மனுவல் மாடல் 22.41 km/l மற்றும் AMT மாடல் 22.61 km/l மைலேஜ் வழங்குகிறது. இந்த காம்பாக்ட் செடான் க்ரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மாருதி சுசுகி டூ ஹூண்டாய் வரை.. பிப்ரவரி மாதத்தில் அசர வைக்கும் கார் சலுகைகள்..