×
 

சாம்பாரே ஒரு மருந்துதான்.. உயிர்க்கொல்லி நோயை சாம்பார் தடுக்கும்.,?

சாம்பாரில் உள்ள மருத்துவக் குணம் புற்று நோயைத் தடுக்கும் அம்சங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தினசரி சாப்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கம், சாம்பார். சாம்பாரை வெறும் குழம்பாக மட்டும் பார்க்கத் தேவையில்லை. அது மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருளும்தான்.
ஆம், தினமும் சாம்பார் சாப்பிடுவதால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
சாம்பாரில் குடல் புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உள்ளன.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், உலகளவில் அதிக அளவு மஞ்சள் உட்கொள்வதால் குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவரீதியான ஆய்வில் அமெரிக்கர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் குடல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளதும் அது பெரும்பாலும் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

மரபுரீதியாகச் சிலருக்கு, குடல்களில் ‘பாலிப்ஸ்’ எனும் சிறு கட்டிகள் தோன்றும். முறையாகக் கவனிக்காமல் விட்டால், இவை பின்னாளில் புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம். இந்தக் கட்டிகளுக்கு ஏற்ற அருமருந்தாக சாம்பார் உள்ளது. அதற்கு அந்த சாம்பாரில் உள்ள மசாலாப் பொருட்கள்தான்.
சாம்பாரில் உள்ள மல்லிவிதை, வெந்தயம், மஞ்சள், கறுப்பு மிளகு, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் ஆகிய மசாலாப் பொருட்களால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாவது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பாரில் உள்ள சீரகம், பெருங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்குச் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. செரிமானம் நன்றாக இருந்தாலே, குடல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

இதையும் படிங்க: ரூ.75 மதிப்புள்ள பெட்ரோல் இப்போ இலவசமாக உங்களுக்கு கிடைக்கும்.. பெறுவது எப்படி தெரியுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை குடல் புற்றுநோயின் தாக்கம் வடஇந்தியர்களுக்குத்தான் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்களின் உணவில் கோதுமை அதிக அளவு இருப்பதே. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால், தென்னிந்தியர்களின் உணவு முறையில் எளிதில் செரிமானமாகக்கூடிய பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.
இந்தியாவில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்தினர் வடஇந்தியர்கள். பொதுவாக வறுத்துப் பொடித்த மசாலாப் பொருட்களை அவர்கள் அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால், தென்னிந்தியர்களின் உணவில் பெரும்பாலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மஞ்சளில் பொதுவாகவே புற்றுநோயைத் தடுக்கும் அம்சங்கள் உண்டு. அதனால், இவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு.



அதேபோல, ருசிக்காக மட்டுமல்லாமல் சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளுக்காகவும் இரைப்பைக் குழாய் நிபுணர்களால் மக்களுக்கு அது பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாக இந்திய உணவு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. அதிலும் சாம்பாரில் கேரட், பாகற்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளி போன்ற காய்கறிகள் சேர்த்துச் சமைக்கப்படுகின்றன.

காய்கறிகளில் உள்ள சத்துகளும் சாம்பார் மூலமாகக் கிடைப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க இவை உதவுகின்றன. அதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். பொதுவாக அதிக அளவு கொழுப்புச் சத்து, குறைந்த அளவு நார்ச்சத்துக் கொண்ட சக்கை உணவை (Junk food) உட்கொண்டால் குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம். சாம்பார் மிகவும் பிரபலமான உணவாக இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் மிளகு, பெருங்காயம் போன்ற மசாலாப் பொருட்கள்தான். ஆக இனி, சாம்பாரே மருந்து!

இதையும் படிங்க: ரூ.75 மட்டுமே செலவு.. 100 கி.மீ பயணத்தை தரும் பஜாஜ் பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share