இதுமட்டுமே உலகமா..? உங்கள் மனைவி ஓடிவிடுவார்... எச்சரிக்கும் அதானி..!
தங்கள் குடும்பம், வேலைக்கு வெளியே ஒருவருக்கு உலகம் இல்லை என்பதை குழந்தைகளும் கவனிக்கிறார்கள். அதையே பின்பற்றுகிறார்கள் என்று அதானி கூறுகிறார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் 70 மணி நேர வேலை என்கிற கருத்து நாட்டில் விவாதத்தைத் தூண்டியது. வாரத்திற்கு 70 மணி நேர வேலை இந்தியா முன்னேறிய பொருளாதார நாடுகளுடன் போட்டியிட உதவும் என்று நாராயண மூர்த்தி கூறினார்.
இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமத்தின் தலைவரும், ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கௌதம் அதானி, இந்தக் கருத்தைப் பற்றி கேலிக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
அவர், ‘‘வாரம் 70 மணி நேர வேலை வாழ்க்கை சமநிலையை பாதிக்கும்’’என அதானி சுட்டிக்காட்டினார். அதானி விரும்பும் வேலையாக இருந்தாலும் அதில் ஒரு சமநிலையை உணர வேண்டும். வேலைப்பளுவால் தொழிலாளர்கள் மரணமடைகிறார்கள் என்ற உண்மையை ஒருவர் ஏற்றுக்கொள்ளும்போது வாழ்க்கை கடுமையாகி விடும்.
ஒருவரின் வேலை-வாழ்க்கை சமநிலையை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. ஒருவர் நான்கு மணிநேரம் குடும்பத்துடன் செலவழித்து அதில் மகிழ்ச்சியைக் காண்கிறார். யாராவது எட்டு மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்தால் அதுதான் அவர்களின் சமநிலை. இருப்பினும் நீங்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்தால் உங்கள் மனைவி ஓடிவிடுவாள்’’ என எச்சரித்துள்ளார்.
அதானி பல மணிநேரங்கள் அலுவலகத்தில் செலவிட்டால், தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்ட பல பெற்றோர்களின் உணர்வுகளையும் கூறியுள்ளார். தங்கள் குடும்பம், வேலைக்கு வெளியே ஒருவருக்கு உலகம் இல்லை என்பதை குழந்தைகளும் கவனிக்கிறார்கள். அதையே பின்பற்றுகிறார்கள் என்று அதானி கூறுகிறார்.
"நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களைச் செய்யும்போது உங்கள் வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு குடும்பம், வேலையைத் தவிர்த்து ஒரு உலகம் இல்லை... நம் குழந்தைகளும் அதை மட்டும் கவனிக்கும். கவனத்தில் கொள்ளும். யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் புரிந்து கொண்டால், வாழ்க்கை எளிமையாகிறது,” என்கிறார் அதானி.
நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் மனிதன் ஒவ்வொரு கணத்தையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். அவனது ஆற்றலை தனக்கு மிகவும் அர்த்தமுள்ள பாதைகளில் செலுத்த முயற்சிக்க வேண்டும், இது நபருக்கு நபர் மாறும்.
முன்னேற்றம் என்பது பண ஆதாயங்களை மட்டும் குறிக்காது. ஒரு தனி நபர் பல்வேறு துறைகளிலும் முன்னேற வேண்டும்’’ என்கிற அதானி ஒருவரின் வாழ்க்கையில் வேலையும், வீடும் மட்டும் அல்ல. அடஹையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளன. தானே கோடீஸ்வரராக இருப்பதால், அதானி குடும்பத்திற்கும், வெளியுலகிற்கும் கூட நேரம் ஒதுக்குகிறார்.
மனிதன் ஒரு சமூக விலங்கு, அதாவது குடும்பமும் சமூகமும் ஒரு மனிதனின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்கிறார்.
எம்குயூர் பார்மசூட்டிகள் நிர்வாக இயக்குனர் நமிதா தாபர், சமீபத்திய நேர்காணலின் போது, நிறுவனத்தின் நிறுவனர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார். நீண்ட நேரம் வேலை செய்வது அவர்களின் உடல், மன நலனில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.