அடியோடு மாறப்போகும் ஆட்டோ- டாக்ஸி டிரைவர்களின் வாழ்க்கை: ஓலா-ஊபருக்கு ஆப்பு..!
லாபம் தொழிலதிபர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் செல்லாமல் நேரடியாக ஓட்டுநர்களுக்குச் செல்லும். இதுதான் நாங்கள் உயிர்ப்பிக்கும் மாதிரி. இந்த முயற்சியின் கீழ், இரு சக்கர வாகனங்கள், டாக்சிகள், ரிக்ஷாக்கள், நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்ய முடியும்.
''ஓலா, உபர், செயலிகளுக்கு மாற்றாக மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கமிஷன் இல்லாமல் முழு பயனும் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கே கிடைக்கும்'' என உள்துறை அமைச்சர் அமிட்ஷா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சவாரி சேவையில் முன்னணி நிறுவனங்களான ஓலா- உபர்- ரேபிடோ நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'சஹ்கார் டாக்ஸி'யை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்தார். தற்போதுள்ள தனியார் நிறுவன சேவைகளைப் போலல்லாமல், சஹ்கார் டாக்ஸி அனைத்து லாபங்களும் பெரிய நிறுவனங்களுக்கு செல்லாமல், ஓட்டுநர்களுக்கு நேரடியாகச் செல்வதை உறுதி செய்யும். இதனால், ஓட்டுநர்களுக்கே அவர்களின் வருமானம் முழுவதும் செல்லும். இதனை நோக்கமாகக் கொண்ட கூட்டுறவு அடிப்படையிலான சேவை விரைவில் தொடங்க உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அமித் ஷா, 'இந்த முயற்சி கூட்டுறவு சங்கங்கள் மூலம், இடைத்தரகர்கள் இல்லாமல் டாக்சிகள், ரிக்ஷாக்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய அனுமதிக்கும். இந்த அமைப்பு செயலி அடிப்படையிலான சேவைகளை மாதிரியாகக் கொண்டுள்ளது. ஆனால் ஓட்டுநர்களுக்கு மட்டுமே பயனளுக்கும் சேவயை மையமாகக் கொண்ட ஒரு கூட்டுறவு கட்டமைப்பின் கீழ் இருக்கும்.
இதையும் படிங்க: ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கி.மீ. ரேஞ்ச் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா?
"இது வெறும் முழக்கம் அல்ல. இதை களத்தில் செயல்படுத்த கூட்டுறவு அமைச்சகம் மூன்றரை ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில், ஒரு பெரிய கூட்டுறவு டாக்ஸி சேவை தொடங்கப்படும். இது ஓட்டுநர்களுக்கு நேரடி லாப ஓட்டத்தை உறுதி செய்யும்.
பிரதமர் நரேந்திர மோடியின் 'சஹ்கார் சே சம்ரிதி' (கூட்டமைப்பு மூலம் செழிப்பு) என்ற பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் 'சஹ்கார் டாக்ஸி' ஆரம்பிக்கப்படுகிறது. பொருளாதார முன்னேற்றங்களை சீர்திருத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை கொண்டுவருகிறோம்'' என அமித் ஷா கூறியுள்ளார்.
ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டண நிர்ணய நடைமுறைகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பயணம் செய்வோரின் தொலைபேசியான ஆண்ட்ராய்டு, ஐபோன் அடிப்படையில் கட்டண முரண்பாடுகள் மாறுபாடுகள் இருப்பதாக சர்ச்சைகளை எழுந்ததால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
"எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணய அமைப்பை நாங்கள் கொண்டுள்ளோம். ஒரே மாதிரியான பயணங்களுக்கு பயனரின் ஆண்ட்ராய்டு, ஐபோன் செல்போனின் இயக்க அடிப்படையில் எங்கள் கட்டணம் வேறுபடுத்துவதில்லை" என்று கூறி, ஓலா குற்றச்சாட்டுகளை மறுத்தது.
"நாங்கள் ஒரு பயணியின் செல்போன் இயக்க அடிப்படையில் விலைகளை நிர்ணயிப்பதில்லை. எந்தவொரு தவறான புரிதலையும் தீர்க்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்'' என ஊபர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி பின்னர் இந்த பிரச்சினையை "நியாயமற்ற வர்த்தக நடைமுறை" என்று கூறினார். உணவு விநியோகம், ஆன்லைன் டிக்கெட் போன்ற துறைகளில் விலை நிர்ணய நடைமுறைகளுக்கு அரசு தனது விசாரணையை விரிவுபடுத்தும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், உபர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு மாற்றாக, லாபம் நேரடியாக ஓட்டுநர்களுக்குச் செல்வதை உறுதி செய்யும் வகையில், 'சஹ்கார் டாக்ஸி' விரைவில் ஒரு பெரிய அளவிலான கூட்டுறவு டாக்ஸி சேவையைத் தொடங்கும்.
இந்த கூட்டுறவு சங்கத்தின் லாபம் தொழிலதிபர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் செல்லாமல் நேரடியாக ஓட்டுநர்களுக்குச் செல்லும். இதுதான் நாங்கள் உயிர்ப்பிக்கும் மாதிரி. இந்த முயற்சியின் கீழ், இரு சக்கர வாகனங்கள், டாக்சிகள், ரிக்ஷாக்கள், நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்ய முடியும்.
கூட்டுறவுத் துறைக்கு குறிப்பாக சேவை செய்வதற்காக ஒரு கூட்டுறவு காப்பீட்டு நிறுவனம் விரைவில் அமைக்கப்படும் என்றும் அமித்ஷா, "குறுகிய காலத்தில், இது மிகப்பெரிய தனியார் துறை காப்பீட்டு நிறுவனமாக மாறும்" என்றும் கூறினார்.
கூட்டுறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமித்ஷா, இந்தத் துறை ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் இணைத்திருக்கும். விவசாய மேம்பாடு, கிராமப்புற முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிக்கும் என்றும் கூறினார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தனது முதல் கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த மசோதா கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். சுயதொழில், சிறு தொழில்முனைவோரின் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும். சமூக உள்ளடக்கத்தை அதிகரிக்கும். புதுமை, ஆராய்ச்சியில் புதிய தரங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்'' என்றும் கூறினார்.
கூட்டுறவு முயற்சிகளில் இந்தியா வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத் தகுந்தது அமுல். 1946 ஆம் ஆண்டு குஜராத்தில் 250 லிட்டர் பாலுடன் தொடங்கிய அமுலின் பயணம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பால் பிராண்டாக மாறியுள்ளது.
2003 ஆம் ஆண்டில், அமுலின் வருவாய் ₹2882 கோடியாக இருந்தது. இன்று அது ₹60,000 கோடியைத் தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: ஒருமுறை சார்ஜ் செய்தால் 650 கிமீ கிடைக்கும்.. கியாவின் மின்சார கார் விலை எவ்வளவு?