உலக ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் அஷ்டமி சப்பரவிழா..மதுரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியான அஷ்டமி சப்பரவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியான அஷ்டமி சப்பரவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சம் இல்லை.
அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் ,அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த அஷ்டமி சப்பரம் விழா மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகும்
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.இந்நிகழ்ச்சி, அதிகாலை 5.30 மணிக்கு கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்து, அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... முகேஷ் அம்பானியின் ரூ.1000 கோடி ஜெட் விமானம்... பைலட்டின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை தொட்டு வணங்கி ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்
இதையும் படிங்க: நிறைவடையும் மகா கார்த்திகை தீபத் திருவிழா..தீப மைக்கு காத்திருக்கும் பக்தர்கள் ..!