இனி வருடம் முழுவதும் இலவசமாக டோல் பிளாசாவில் செல்லலாம்.. ரூ.3,000 இருந்தா போதும்.!!
இந்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைகளில் வருடாந்திர மற்றும் வாழ்நாள் டோல் பாஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண முறையை எளிதாக்கி, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.
தனியார் வாகனங்களுக்கு இந்த புதிய பாஸ் அறிமுகமாக உள்ளது. மேலும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் திட்டத்தை இறுதி செய்வார். இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் ஆண்டுக்கு ரூ.3,000 கட்டணத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வரம்பற்ற பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், 15 ஆண்டுகளுக்கான வாழ்நாள் பாஸ் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்நாள் பாஸ், தனியார் வாகனங்களின் அதிகபட்ச போக்குவரத்து காலக்கெடுவை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும். பயணிகள் இந்தப் பாஸ்களை தனியாக வாங்க தேவையில்லை, ஏனெனில் அவை ஃபாஸ்டேக் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க விரும்பும் பயணிகள் மாதாந்திர பாஸ்களை டோல் பிளாசாக்களில் ரூ.340க்கு வாங்க முடிகிறது.
ஆண்டிற்கான மொத்த கட்டணம் ரூ.4,080 ஆகும். 2023-24ஆம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலை டோல் வசூல் ரூ.55,000 கோடியாக இருந்தது, அதில் தனியார் வாகனங்களின் பங்கு ரூ.8,000 கோடி மட்டுமே. புதிய திட்டம் அமலாகி விட்டால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிறிய அளவிலான வருவாயை விட்டுக்கொடுக்க நேரிடும் என்றாலும், பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது.
இதையும் படிங்க: ஒருமுறை சார்ஜ் செய்தால் 501 கி.மீ ஓடும் எலக்ட்ரிக் பைக்.. ஓலா பைக் விலை ரொம்ப குறைவு தான்..
சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த திட்டத்தை மேற்கொள்ளும் இறுதி கட்டத்தில் உள்ளது. பயணிகள் செலவுகளை குறைக்கும் வகையில், தனியார் வாகனங்களுக்கு கிலோமீட்டர் அடிப்படையிலான புதிய டோல் கட்டண முறையை மாற்றும் வாய்ப்பை அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, ஒரு குறிப்பிட்ட டோல் பிளாசாவை அடிக்கடி கடக்கும் பயணிகளுக்கு மட்டும் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது.
மாதாந்திர பாஸ் பெற, பயணிகள் முகவரிச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பாஸின் விலை மாதத்திற்கு ரூ.340, வருடத்திற்கு ரூ.4,080 ஆகும். புதிய வருடாந்திர பாஸ் ரூ.3,000 என்ற குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதால், பயணிகள் ஒரு டோல் பிளாசாவில் செலுத்தும் தொகையை விட இது மிகச் சலுகையானதாக இருக்கும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும் மற்றும் டோல் நெரிசல் குறையும். இந்த மாற்றம், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரும் நன்மை அளிக்கக்கூடியது. இதன் மூலம், இந்தியாவின் சாலை போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பயண நேரம் குறைவதற்கும், செலவினங்கள் சிக்கனமாக மாற்றப்படுவதற்கும் வழிவகுக்கும்.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகம் விற்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்.. முழு லிஸ்ட் உள்ளே!!